Monday, January 28, 2019

மாயக்குதிரை - தமிழ்நதி

நான் தீவிர வாசிப்பாளன் கிடையாது என்பதால் பெரும்பாலும் புத்தகங்களை வாசித்துவிட்டு மறந்துபோவதோடு சரி. (தருமி சாருக்கு நன்றாகத் தெரியும் ;)) இனி வாசித்த புத்தகங்கள் பற்றிய  எனது எண்ணங்களை இங்கே பதிந்து வைக்கலாம் என மீண்டுமொரு துவக்கம். கூடுமானவரை உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன்.

மாயக்குதிரை | MAAYAKKUTHIRAI: சிறுகதைகள் | SHORT STORIES (Tamil Edition) by [THAMIZHNATHY, தமிழ்நதி]

மாயக்குதிரை - தமிழ்நதி.

இவரது பூனைக்குட்டி பதிவுகள் மூலம்தான் முதல் அறீமுகம். பின்னர் முகப்புத்தகம் மற்றும் இவரது பல பதிவுகள் மூலம் இவரது அரசியல் எழுத்து என மிகவும் நெருங்கிய நபர் என்ற உணர்வைத் தருபவர்.  இவரது பார்த்தீனியம் நாவல் குறீத்த சில சிலாகிப்புகளை  வாசித்து, அந்நூலை வாசிப்புப் / வாங்கும் பட்டியலில் வைத்திருந்தேன். ஆனால், எதேச்சையாக சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தில் மாயக்குதிரையைத் தேர்வு செய்து, பார்த்தீனியத்தைப் பின்னுக்கு தள்ளீவிட்டேன். சரி மாயக்குதிரைக்கு வருவோம்..

இந்நூலை வாசிப்பனுபவம் அல்லது பொழுதுபோக்கு அம்சமாகத்தான் அனுகிணேன். I was totally wrong.. அதேசமயம் இது ஒரு புனைவு அல்லது கற்பனையில் தோன்றீய சிறூகதைகள் என்றூம் என்னால் நம்ப இயலவில்லை. படைப்பாளியின் பாத்திரங்களில் தமிழ்நதியினைக் காணலாம், அது இலக்கிய உலகில் நடப்பதுதான். ஆனால் இக்கதைமாந்தர் பலர் உயிரும் சதையுமாக வாழ்ந்திருக்கக் கூடியவர்களே, எல்லாமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதை (நான்)நம்புவதற்கில்லை.

இந்நூல் என்னளவில் ஒரு உளவியல் ஆவணம். ஈழத்தமிழர்கள் குறித்த அரசியல் ஆவணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பலவாண்டுகள், போரினால் சீரழிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தினரின் குடும்பம், சமூக உளவியல், உறவுக் சிக்கல்கள் என பாத்திரப் படைப்புகள் நீள்கிறது. இந்நூலிலுள்ள படைப்புகள் ஈழப்போரட்ட காலகட்டதிற்கான அகம் சார்ந்த  ஆவணங்களில் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். 

சயந்தனின் 'அவள்' என்ற பாத்திரத்தை பாரிசிலோ, டொரண்டோவிலோ புலம்பெயர் தமிழர் கூட்டத்தில் நீங்கள் சந்திக்க நேரிடலாம். இப்புத்தகத்தை வாசித்தபின் 'அவள்' பற்றிய உங்கள் பார்வை மாறலாம், மாறாமலும் இருக்கலாம். என்ன குழப்புகிறேனா.. ? இப்படித்தான் பல இடங்களில் வாக்கியத்தின் முடிவில் நுட்பமான நேர்த்தியோடு திருப்பிபோடுகிறார் தமிழ். 
சிதம்பரம் ஆச்சியின் மரணத்தைப் புதிராகவே விட்டுச்சென்றது ஒரு ஆசுவாசம். புலம்பெயர் தமிழர் மற்றும் தங்கிப்போன மக்களூக்கிடையே உள்ள உளவியல் சிக்கலை மைதிலியினுடனான கணநேர உரையாடலில் சொல்லிவிட்டு நகர்கிறார். புலம்பெயர் தமிழரின் பொருளாதாரச் சிக்கலையும் அதனைத் தொடர்ந்து நிகழும் உறவுச் சிக்கல்கள் எனப் பலவற்றை தொட்டுச் சென்றுவிட்டார்  அவரது கதாப்பாத்திரங்களுள். 
புத்தர் கடிகளின் இரணத்தின் மூலம் இராணூவ அரசியலின் வலியை ராசத்தியினூடே கதைத்துச் செல்கிறார். 
'ழ'கரமில்லாமல் தமிழில்லை என்பது போல பூனையில்லாமல் தமிழுமல்ல (thanks to FB) அவரது படைப்புகளூம் இருக்காது போல.
'பொறுப்பேற்றலில் முதன்மையானது செவிமடுப்பது', பெண் வேசி ஆண் மட்டும் மாமன்னனா..? என்பவை போல பல இடங்களில் மிகவும் நுட்பமான மனவினைகளை வார்த்தைகளாக்கியிருக்கிறார், அதோடு உரையாடலுக்கான சாத்தியங்களை விட்டுச் செல்கிறார். சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன் என்ற யதார்த்தப் பின்னணியில் பாத்திரங்களைப் புனைந்திருக்கிறார். இயக்கங்களூக்கான தேவையை நுட்பமான பாத்திரப்படைப்புகள் மூலம் தர்க்கம் செய்திருக்கிறார். இந்த தர்க்கத்தையும் வேறு தொணீயில் துவங்கி முடிவில் புரட்டிப்போடும் விதமாகவே செய்திருக்கிறார். I am ok with it. Its her/their choice or they didn't have one.

ஓ.. அரசியல் பேசும் கதைகளா..? என்ற முடிவிற்கு வரவேண்டாம். எல்லாப் பாத்திரங்களின் ஆழ்மனதிலும், அதற்கான வெளியிருக்கிறது, கண்ணிருப்போருக்குத் தெரியலாம், தெரியாமலும் போகலாம். [Reader can choose (not) to]

குறைகள் கண்டுபிடிக்கும் அளவுக்கும் நான் தீவிர வாசிப்பாளன் கிடையாது, ஆனாலும்,  எனது மேம்போக்கான வாசிப்பில், எனக்குத் தோன்றியதைக் குறிப்பிடுகிறேன். பாத்திரப்படைப்புகள் (ஒரு சில) மற்றூம் கதையின் போக்கு எதிர்பார்த்த திசையிலேயே பயணீப்பதைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது. It is very predictable, so letting down at places.
இப்புத்தகம் நிச்சயம் ஈழத்தமிழர் குறித்து உலவும் பல தோற்றப் பிழைகளை போக்க வல்லது அல்லது அதற்கான தர்க்கங்களை முன்வைக்கிறது.  

மிகவும் நுட்பமாக அணூக வேண்டிய நூல், வாழ்த்துகள் மற்றும் நன்றிங்க - தமிழ்நதி.

பொ.துறப்பு : இப்படித்தான் இருக்கிறது என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குமாயின் அது எனது எழுத்தின் குறைபாடுதான், இப்படியும் இருக்கலாம் என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.

இ-கலப்பை கொஞ்சம் படுத்துகிறது - பிழைகளுக்கு மன்னிக்கவும்.

கின்டில் - https://www.amazon.in - கின்டில்