Tuesday, February 19, 2008

பட்டொளி வீசி பறக்குது பாரீர்

பட்டொளி வீசி பறக்குது பாரீர் என்று இந்தியாவின் பெருமையை பலரும் பலவிதமாகப் பார்க்க நினைத்தனர். ஆனால் இப்படித்தான் வீசச்செய்வோம் என்று சிலர் முனைப்புடன் இருக்கின்றனர்.

இறப்பு தொடருக்கு இடையில் இப்படி ஒரு தகவல் பதிவு தேவையா? என்று யோசித்தாலும் பேசப்படவேண்டியவை என்பதால் பதிவிடுகிறேன்.

இதோ இந்த ஆண்டிலும் இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் கயமைத்தனம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை, இந்த ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை.

//A Massive Case Of Fraud
Journal editors are left reeling as publishers move to rid their archives of scientist's falsified research
William G. Schulz
A CHEMIST IN INDIA has been found guilty of plagiarizing and/or falsifying more than 70 research papers published in a wide variety of Western scientific journals between 2004 and 2007, according to documents from his university, copies of which were obtained by C&EN. Some journal editors left reeling by the incident say it is one of the most spectacular and outrageous cases of scientific fraud they have ever seen.//

முழுத்தகவல் இங்கே.

http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

பல வகையில் ஆராய்ந்து அனுகவேண்டிய ஒரு நிகழ்வு. பொறுத்திருந்து பார்ப்போம், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் மற்றுமொரு நிகழ்வாய்ப் போகப்போகிறதா இல்லை ஏதாவது ஒரு மாற்றத்தின் துவக்கமாக இருக்குமா என்று.

7 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு...

இதுபோன்ற செயதிகளுக்கான முக்கியத்துவம் துறைசார்ந்த நண்பர்களால்தான் பதிவிட முடியும். நீங்கள் இதுபோன்ற பதிவுகளை கொஞ்சம் விளக்கமாக வெளியிடலாம்.

அறிவியல்துறைதான் திருட்டுக்கு அப்பாற்பற்ற துறைபோன்று தோற்றம் உள்ளது. அங்கு நடக்கும் அறிவுத் திருட்டுகளை அம்பலப்படுத்துவது அவசியம்.

பாராட்டுக்கள்.

கையேடு said...

உண்மைதான் திரு.ஜமாலன், எழுதும்போதே இன்னும் விளக்கமாக எழுத வேண்டுமோவென்ற எண்ணம் தோன்றியது..

//அறிவியல்துறைதான் திருட்டுக்கு அப்பாற்பற்ற துறைபோன்று தோற்றம் உள்ளது.அங்கு நடக்கும் அறிவுத் திருட்டுகளை அம்பலப்படுத்துவது அவசியம். //

இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான்.

நன்றி..

Kulapam said...

It is an unfortunate incident. But, wonder is there is there any formal course in any Indian Universtiy to teach about research ethics, originality and plagarism...
Like kula tholizil, ppl learn from seniors and by them self and they start reporting work.... so we have to blame the system and make is much stronger ans streamlined than it is now :)

கையேடு said...

//It is an unfortunate incident.//

இதை ஒரு unfortunate நிகழ்வு என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஒரு குற்றம்.

இக்குற்றத்தினால் இந்திய அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்களைப்பற்றிய உலகளாவிய கருத்துக்கள் மாற்றியமைக்கப்படுவதனால்(அதுவும் தவறுதான்) ஒரு சிலர் இதை ஒரு unfortunate incident என்றழைக்கலாம்.

//But, wonder is there is there any formal course in any Indian Universtiy to teach about research ethics, originality and plagarism...//

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் "ethics in science" என்றொரு பாடம் அனைத்து ஆராய்ச்சி மாணவருக்கும் கட்டாயப்பாடமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதுபோன்ற பாடங்களைப் பரிந்துரைக்கலாம்.

ஆனால், இவ்வினைப்பில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகளைக் குற்றமாகக் கருத ஒரு அடிப்படை நல்லொழுக்கம் போதுமானது. இக்குற்றத்தைப் புரிந்த ஒருவருக்கு "ethics in science" என்ற ஒருமணிநேரப்பாடம் மற்றுமொரு பாடவேளையாகவே சென்றிருக்கும்.

//Like kula tholizil, ppl learn from seniors and by them self and they start reporting work....//

இவ்வரிகளின் பின்னிருக்கும் துறை சார்ந்த புரிதலை இவ்வரிகள் நேரடியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். இப்பதிவின் நிகழ்வுடன் இணைத்து வாசிப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தான புரிதலை வழங்கக் கூடிய அபாயம் இருக்கிறது.

// so we have to blame the system and make is much stronger ans streamlined than it is now :)//

அமைப்பில் சில மாற்றங்கள் தேவைதான். இது குறித்து விரிவாக விவாதிக்கப்படவேண்டும்.

வருகைக்கு நன்றி திரு. "அறிவியல் ஆயிரம்".

Kulapam said...

இதை ஒரு unfortunate நிகழ்வு என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஒரு குற்றம்.

ஓருவர் செய்த தவறு ஆனால், பலருக்கு பதிப்பு இதை தான் unfortunate என்று கூறினேன்

//But, wonder is there is there any formal course in any Indian Universtiy to teach about research ethics, originality and plagarism...//

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் "ethics in science" என்றொரு பாடம் அனைத்து ஆராய்ச்சி மாணவருக்கும் கட்டாயப்பாடமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதுபோன்ற பாடங்களைப் பரிந்துரைக்கலாம்.

ஆராய்ச்சி மாணவர்க்கு அடிபடை என கருதப்படும், ethics in science , IITM மட்டும்மாவது இருக்கின்றதே....

ஆனால், இவ்வினைப்பில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகளைக் குற்றமாகக் கருத ஒரு அடிப்படை நல்லொழுக்கம் போதுமானது. இக்குற்றத்தைப் புரிந்த ஒருவருக்கு "ethics in science" என்ற ஒருமணிநேரப்பாடம் மற்றுமொரு பாடவேளையாகவே சென்றிருக்கும்.

//Like kula tholizil, ppl learn from seniors and by them self and they start reporting work....//

இவ்வரிகளின் பின்னிருக்கும் துறை சார்ந்த புரிதலை இவ்வரிகள் நேரடியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். இப்பதிவின் நிகழ்வுடன் இணைத்து வாசிப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தான புரிதலை வழங்கக் கூடிய அபாயம் இருக்கிறது.

might be.......

// so we have to blame the system and make is much stronger ans streamlined than it is now :)//

அமைப்பில் சில மாற்றங்கள் தேவைதான். இது குறித்து விரிவாக விவாதிக்கப்படவேண்டும்.

அமைபில் சில அல்ல பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்,.......இது குறித்து விரிவாக விவாதிக்கப்படவேண்டும்
:)

valthukal kaiyeedu .......

sury siva said...

ப‌ண்டைய‌ இல‌க்கிய‌த்தைப் ப‌டிக்கும்போது ஒரே க‌ருத்தினை ப‌ல்வேறு ஆசிரிய‌ர்க‌ள் ப‌ல‌வித‌மாக‌ விவ‌ரிக்கிறார்க‌ள். அடிப்ப‌டைக் க‌ருத்து ஒன்றேதான். இந்த‌ நோக்கில்
பார்த்தால் வ‌ள்ளுவ‌னின் க‌ருத்துக்க‌ள், வேத‌ ம‌றைக‌ளின் உட்பொருளை மைய‌மாக‌க்
கொண்டுதான் பிற்கால‌ நூல்க‌ளின் க‌ருத்துக்க‌ளும் அவ‌ர‌வ‌ர் பாணியிலே அமை ந்துள்ள‌ன். இதை திருட்டு என‌ச் சொல்லிட‌ முடியாது. Great men think alike என்பார்க‌ள். So do fools என‌ச் சொல்வ‌தும் உண்டு.
ஆனால், அப்ப‌ட்ட‌மாக‌ அப்ப‌டியே காப்பிய‌டிப்ப‌து என்ப‌து ப‌ண்பாட‌ற்ற‌ செய‌ல் என்ப‌தில்
ம‌று க‌ருத்து இருக்க‌ வாய்ப்பு இல்லை. இது இந்திய‌ ம‌ண்ணில் அதிக‌ம் காண்ப‌து
இன்றைய‌ ஒட்டுமொத்த‌ ச‌முதாய‌த்தை வ‌ழி ந‌ட‌த்துவோர் க‌ட‌மை என்ன‌ என்ப‌தையும்
சுட்டிக்காட்டுகிற‌து.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

கையேடு said...

வணக்கம் திரு.சுப்புரத்தினம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் எனது நன்றிகள்.

// இதை திருட்டு என‌ச் சொல்லிட‌ முடியாது. Great men think alike என்பார்க‌ள். So do fools என‌ச் சொல்வ‌தும் உண்டு.//

இது அறிவியல் உலகிலும் சாத்தியமே.

//ஆனால், அப்ப‌ட்ட‌மாக‌ அப்ப‌டியே காப்பிய‌டிப்ப‌து என்ப‌து ப‌ண்பாட‌ற்ற‌ செய‌ல் என்ப‌தில்
ம‌று க‌ருத்து இருக்க‌ வாய்ப்பு இல்லை.
இது இந்திய‌ ம‌ண்ணில் அதிக‌ம் காண்ப‌து
இன்றைய‌ ஒட்டுமொத்த‌ ச‌முதாய‌த்தை வ‌ழி ந‌ட‌த்துவோர் க‌ட‌மை என்ன‌ என்ப‌தையும்
சுட்டிக்காட்டுகிற‌து. //

உண்மைதான், இது குறித்து பலவகையில் பலதுறைகளில் ஆராய்ந்து மாற்றத்தைக் கொண்டுவரவேண்டியது அவசியம்.

நன்றி..