Wednesday, October 22, 2008

ஈழம் - ஒரு பதிவு

Mike அவர்களின் ஈழம் குறித்த பதிவிற்கான அழைப்பைத் தொடர்ந்து இப்பதிவு.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையின் வேர் என்ன?, என்பது குறித்த வரலாற்று உண்மைகள் எதுவாகயிருந்தாலும், அங்கே போராடும் குழுக்களின் போராட்ட வழிமுறைகள் எப்படியாயினும், அங்கே இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதையும் அங்கே தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டியதற்கு அவசியமான சூழலையும் உருவாக்கியது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பை முனைப்புடன் செய்கிறது என்பது கண்கூடு. தமிழர் என்றில்லாமல், அண்டை தேசத்திலிருக்கும் எந்தவொரு இனமாகயிருந்தாலும், இப்படியானதொரு இன அழித்தொழிப்பு நடைபெற்றால் அதனை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே ஒரு இந்தியப் பிரஜையாக எனது விருப்பமாகயிருக்கும். அப்படியிருக்கையில், அதனை எதிர்க்காவிட்டாலும் அதற்குத் துணைபோகும் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அதற்கான எனது கண்டங்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.நிற்க.

வன்மக்கணக்குகளை இரண்டு பக்கங்களிலும் சரிபார்த்துக் கொண்டுபோகாமல், சமரசமாக இலங்கையில் எல்லோரும் வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள் பலநூறுமைல்கள் தள்ளியிருக்கும் சில வரையறை சார்ந்த காந்தியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது அதிகம், அதனால் அவர்கள் மனதளவில் சமரசம் அடைய வேண்டுமெனில், தனி ஈழம் அளிப்பதோடல்லாமல், இப்படியான இன அழித்தொழிப்பை மேற்கொண்டதற்காக, முறையாக இலங்கை அரசு (அதற்கு துணை போன இந்திய அரசும்) தமிழ்மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மன்னிப்புக் கோருவதோடல்லாமல், அவ்வரசு வெட்கிக் குறுகிச் சிறுமைப்படவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுமா... ?? கால மாற்றத்தில் விடையிருக்கலாம்.

ஈழம் என்றில்லை எங்குமே ஒரு இனத்தை அழிக்க முற்படும் எந்தவொரு இனமும் அதற்காக வெட்கித் தலைகுனிந்து, பொதுவில் அதற்கான வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரினால் மட்டுமே சமரசத்திற்கான தளத்தில் நம்பிக்கை பிறக்கும். இது வரலாறு புகட்டும் உண்மையும் கூட.

ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..

4Nov2008 அன்று சேர்க்கப்பட்டது:
இதையும் கொஞ்சம் வாசிங்க
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - நாகார்ஜுனன்

29 comments:

Anonymous said...

மிகச் சுருக்கமாக கூறி இருந்தாலும் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றீர்கள்..

நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

கயல்விழி said...

பல தமிழர்களின் கருத்தை சுருக்கமாக எழுதி இருக்கிறீர்கள், நல்ல பதிவு.

Ŝ₤Ω..™ said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை..
நன்மை நடக்கும் என்ற் நம்பிக்கையில்...

Ŝ₤Ω..™

கையேடு said...

திரு.பதி,செந்தில் மற்றும் கயல்விழி அவர்களுக்கு,

நம்பிக்கையில் பங்கு கொண்ட உங்கள் மூவருக்கும் நன்றி.. :)

ஜமாலன் said...

சுருக்கமான பதிவு. பொதுவான தமிழர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒன்று.

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையானப் பதிவு.

நீங்கள் படித்த அதே வகுப்பில் நானும் மூன்று வருடங்கள் இருந்தேன் என்பதே எனக்கு மிகப் பெருமை. ரத்தினச் சுருக்கமாய் மிக அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள் நண்பரே. மிகப் பெருமையாய் இருக்கின்றது.

கையேடு said...

நன்றிங்க ஜமாலன்.

நன்றி பால்.

Anonymous said...

அழகாக, சுருக்கமாக, 'பொட்டிற் தெறித்தாற்' போல சொல்லி இருக்கீங்க! நன்றி! உங்கள் போன்றோரின் குரல் தான் எங்களுக்கு ஈழம் என்றைக்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகப் படுத்துது! கண்களில் நீர் பனிக்க நன்றிகள்!

- உங்கள் ஈழத்து உறவொருவன்

கையேடு said...

//ஈழத்து உறவொருவன்//
நன்றிங்க அனானி.

கையேடு said...

இரண்டாவது அனானிக்கு,

இறையாண்மைன்னா என்ன?

Anonymous said...

Indrajith,

As a human being don't you have the sense to voice against any type of genoicide like sinhalese on tamils,like bhramins on tamils/dravidians in India.Time will tell you the truth and remove your masks.Why the worry about or voice by only bhramins or bhraminical medias against Tamilelam , since they will face more problems once Tamilelam is formed and they cannot have bhraminical hegemony.
So it is a voice for Aryan race by opposing it's enemy race like tamils who oppose them from the root cause.

கையேடு said...

கடைசி அனானி அவர்களுக்கு,
திரு இந்திரஜித்தை நோக்கிய உங்கள் கருத்துக்களை தனிமனித தாக்குதல் இல்லாமல் அவரிடம் நேரடியாக எடுத்து வையுங்கள்.

Anonymous said...

//கையேடு said...
இரண்டாவது அனானிக்கு,
இறையாண்மைன்னா என்ன?//


அடுத்த நாட்டு அப்பாவிகளின் சடலங்களின் மேல் (தற்காலிகமாக) தக்கவைக்கப்படும் "இருத்தல்" என கொள்ளலாமா??? ;)

Anonymous said...

Please see this.

http://www.army.lk/morenews.php?id=17719

Anonymous said...

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்

தேவன். (கனடா)

இந்த உலகானது பல சுவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவையாவன மேற்காகவும், கிழக்காகவும், மொழிவாரியாகவும், வகுப்பு வாரியாகவும், அடிப்படையவாதங்களாகவும், நிற, இன, வாத வேறுபாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல வேறுபாடுகளை கொண்ட உலகமும், பலம் வாய்ந்த பெரும் தேசிய இனங்களும், அடிப்படைவாதங்கள் பேசும் குறுந்தேசிய, இனங்களும் ஒன்றை ஒன்று அடக்குவதாகவும் அல்லது விழுங்குவதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் நின்றுதான் எதிர்காலத்துக்கான அமைதி சுபீட்சம், மானிட இருப்பு என்பவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாடுகளையும் வரலாறுகளையும் ஆராயும் போது, 1977களின் பின்புதான் மிகவும் உச்சநிலையும் கொதிநிலையையும் அடைந்தது எனும் முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. 1977 தமிழருக்கு எதிரான இனக்கலவரம், வடக்கில் பாதுகாப்பு படைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக 1981ல் தமிழ் மக்களின் ஆன்மாவாக கருதப்பட்ட யாழ். நூலகம் எரிப்பைத் தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம். இதனைத் தொடர்ந்து தமிழ் தரப்பில் உருவாகிய எழுச்சிகள், பல்வேறு இயக்கங்கள் என இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலகட்டம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரிசனை அக்கறை இலங்கைத் தீவின் மீது என்றும் இல்லாதவாறு மிகவும் தீவிரம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர் அரசு மேற்கொண்ட திறந்த பொருளாதாரச் கொள்கையும் மேற்குலக சார்பான அரசியல் கொள்கை முன்னெடுப்புகளும் இந்தியாவுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவனவாகவும் உவர்ப்பாகவும் இருந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக அக்காலட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசு, தெற்காசிய பிராந்தியத்திய நாடான இலங்கையில் தனது ஆதிக்கத்தையும், ஆழுமையையும் ஸ்திரமாக பேணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டிறகு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய மத்திய நடுவன் அரசு பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் பலவித உதவிகளையும் வழங்குவதன் மூலம் ஜே.ஆர் அரசை ஆட்டங்காண வைத்து, இந்தியாவிடம் சரணாகதி அடைய வைப்பதற்காக இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டைக் கையாண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடானது தவிர்க்க முடியாததும்கூட. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கைத் தீவில் ஆட்சி செய்த பெரும்பான்மை அரசுகள் ஒர் உறுதிப்பாடற்ற அரசியல் தலைமைகளை கொண்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை சரிவர கையாளாதாலும், அனைத்து விடையங்களிலும் இந்தியாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் ப+கோள அரசியல் நலன்களை கொண்ட அரசியல் யதார்த்தமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் தமிழர் பிரச்சினையும் பார்க்கப்படல் வேண்டும்.

இவற்றினுள் ஒன்றை ஒன்று பிரித்து பார்க்க முடியாது. அதாவது பாலும் நீரும் போல இந்தத் தளத்தில் நின்றுதான் இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும். 1984 ஆண்டில் எதிர்பாராத இந்திராகாந்தியின் படுகொலை என்னும் கொடிய விபத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரப்படுகின்றார் ராஜீவ் காந்தி. ஏனெனில் அரசியல் என்பது அவரது விருப்பமான தேர்வாக இருக்கவில்லை. அதனால் அவரது வாழ்வின் முடிவும் கொடிய விபத்தாகவே அமைந்துவிடுகின்றது. இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. புலிப் பாசிச கும்பலின் ஊடகங்கள் இன்றுவரை இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிடாத நிலமையில், புலிகளின் பேச்சாளரான ப. நடேசனின் கோரிக்கைகளான கடந்த காலத்தை மறக்கும் படியும், தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கும்படியும் கூறி இருக்கிறார். புலிகளின் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை மறப்பதற்க்கு இது என்ன மாமியார் மருமகள் சண்டையா? இந்த விடையத்தை சர்வதேச இன்டர்போலும், இந்திய உயர் நீதிமன்றமும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்மானித்துவிட்டன. இந்த நிலையில் பிரபாகரன் சார்பாக ப. நடேசன் சோனியாகாந்தியிடம் கோரிக்கைவிடுவது மிகவும் அபத்தமானது.

எது எப்படி இருப்பினும் ராஜீவ் காந்தியின் விருப்பமற்ற அரசியல் பிரவேசம் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் களங்கமற்ற முகங்கொண்ட ராஜீவ் காந்தியின் கொலையென்பது மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ முடியாத குற்றமாகவும், அவரைக் கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்னும் குரல்கள் பலமாக எப்போதும் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். புலிகளின் கடந்த கால நூற்றாண்டிற்கும் மேலான பாசிச பொறிமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அது என்னவெனில், புலிகளது பாசிச கட்டுமானங்களையும, செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நேர்மையான, பலவீனங்களற்ற திறன் உள்ளவர்களை, புலிகள் ஒருபோதும் அணுகுவதில்லை. மாறாக, தங்களை கேள்வி கேட்பவர்களையும் தமக்கு அரசியல் சவாலாக இருக்ககூடியவர்களையும், திறமையானவர்களையும் துரோகம் பட்டம் சூட்டி, சுட்டு அழித்தே வந்துள்ளர்கள்.

ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அவர்களின் வாழ்விற்கு செழிப்பூட்டிவருகிறார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது, தமிழ் நாட்டு சினிமாக் காரர்கள் மட்டும் தங்கள் நன்றிக் கடனை வெளிப்படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டு சினிமாக் காரர்களிடமும் திராவிட கட்சிகளிடமும் இலங்கைத் தமிழனான நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுவது போல நினைத்து, இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள். இந்து, தினமலர், துக்ளக், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகள் புலிகளை எதிர்த்து எழுதி வருவதால், அவைகளை பிராமணியப் பத்திரிகைகள் என வர்ணித்து, அதனால்தான் இலங்கைத்தமிழர்களை எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். தயவுசெய்து உங்குள்ள பிராமணிய ஆதிக்கத்தையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தொடர்புபடுத்தாதீர்கள். (மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.
http://www.thenee.com/

Paandiyan said...

Thevan the all party leader have you forgotten how many killing have you done what you call them? you killed innocent people.

ஜோசப் பால்ராஜ் said...

இங்கு புலி எதிர்ப்பு பிரச்சாரம் என்ற பெயரில் வரலாற்றுக்குப் புறம்பான தகவல்களை சில பெயரில்லாதவர்கள் வந்து அள்ளித் தெளிப்பது வேதனையளிக்கிறது.

இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் நேரடி எல்லைத் தொடர்பு என்பதே இல்லை எனும் போது, பல நாடுகளுடன் இந்தியா எல்லைப் பிரச்சனைகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். இதில் உண்மையென்னவென்றால் இந்தியாவோடு எல்லைத் தகராறு கொண்டுள்ள நாடுகள் சீனாவும், பாகிஸ்தானும் மட்டுமே. பூட்டான் எனும் நாடு தனி நாடாக இருப்பினும் அது இன்று வரை இந்தியாவின் சொல்படி நடக்கும், இந்தியாவின் ஒரு மாநிலம் போன்று இருக்கும் ஒரு நாடுதான். பூட்டானில் இருக்கும் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதில் இருந்து, மேற்பார்வை பார்ப்பது வரை அனைத்தும் இந்திய ராணுவத்தால் தான் செய்யப்படுகின்றது. மேலும் பூட்டானின் வெளியுறவுக் கொள்கையும் இந்திய மேற்பார்வையில் தான் வகுக்கப்படுகின்றது. பூட்டான் அரசின் லாட்டரிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்கப்படுகின்றன. அதோடு இருநாட்டவரும் கடவு சீட்டு(பாஸ்போர்ட்) & நுழைவு உரிமை சீட்டு (விசா) இல்லாமல் போய்வரலாம். பூட்டான் தேசத்தவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கவும், வேலை பார்க்கவும் அனுமதியுண்டு.

நேபாளத்திற்கும் இந்தியாவில் இருந்து விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் சென்றுவரலாம் என இருந்தது,ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து கடத்தப்பட்ட பின் தற்போது பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இன்று வரை நேபாளத்திற்கும் நமக்குமிடையிலும் எந்த எல்லை பிரச்சனையும் வந்ததில்லை.ஆனால் புலி எதிர்ப்பு , தமிழ் இன ஒழிப்புக்குத் துணை போதல் என்ற சில சோ, சு.சாமி, இந்து ராம் போன்றவர்களின் எண்ணங்களாலும், அவர்களிடம் உள்ள ஊடகங்களின் பலத்தாலும் இந்து ராம் போன்றோருக்குக் கிடைத்த சிங்கள ரத்னா விருதுகளாலும் இன்று வரலாற்று திரிபு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு வருகின்றது.

இறையான்மை இறையாண்மை என கூவும் அந்த பெயரிலிக்கு இறையாண்மையின் அர்த்தம் தெரியுமா? சமத்துவமும், ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூக கட்டமைப்பும் இல்லாத ஒரு நாட்டில் முழுமையான இறையாண்மை உள்ளதென சொல்ல இயலுமா? முதலில் இறையாண்மையை பற்றிக் கூவும் இவர்கள் இலங்கையில் இறையாண்மை உள்ளது என சொல்ல இயலுமா? அருகதையற்றவர்களின் கூக்குரல் ஒரு சமூகத்தின் அழிப்பைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க வேண்டும் என்பதற்காகவா? இப்படி ஒரு கருத்தை தமிழில் படிக்கவே வெட்கமாக இருக்கிறது .

ஜோசப் பால்ராஜ் said...

//இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. //

முதலைக் கண்ணீருக்கு உதாரணம் வேண்டுமென்றால் இதைக் காட்டலாம்.
காங்கிரஸ் பேரியக்கம் அதன் மாண்பையும், மகத்துவத்தையும் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ராஜிவ் கொலையுண்ட விதத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் ராஜிவ் குழந்தை முகம் கொண்டவர், அப்பழுக்கற்றவர் என்பது போன்ற கருத்துகள் கொடுரமாக கொலையுண்ட ஒரேக் காரணத்திற்காக அதுவரை அவர் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து அவரை மகாத்மா ராஜிவ் காந்தியாக அறிவிக்க முயல்வது வேதனையளிக்கின்றது. போபர்ஸ் பிரச்சனையில் சிக்கி தவித்த வேளையில் இந்தியாவின் கவனத்தைத் திருப்ப ராஜிவ் எடுத்த அதிரடி நடவடிக்கையே ஈழப்பிரச்சனை. சண்டை போடும் இரு தரப்புகளுக்கிடையே சமாதானம் செய்ய சென்றால் சண்டையிடும் இருதரப்புக்கும் இடையில் அல்லவா ஒப்பந்தம் ஏற்பட வழிசெய்திருக்க வேண்டும்? நாம் நடுநிலையாளர் என்றால் அவர்கள் ஒப்பந்தத்தில் நாம் பார்வையாளராக அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஈழத்தமிழர் சார்பாக இலங்கையரசுடன் ஒப்பந்தம் செய்ய நமக்கு அதிகாரம் அளித்தது யார்? அப்போது எங்கே போயிற்று இறையாண்மை ?
அமைதிப் படையை பின்னால் இருந்து தாக்கினார்கள், வலிந்து தாக்கினார்கள் என்று சொல்வோர் திலீபன் மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் வரை புலிகள் தாக்கினார்களா? புலிகளின் முக்கியத் தளபதிகள் 12 பேர் அமைதிப் படையால் கைது செய்யப்பட்டு சயனைட் தின்று உயிர்விடும் வரை புலிகள் தாக்கினார்களா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலுமா? வசதியாக வரலாற்றை மறைத்து, தங்கள் வசதிக்கேற்ப திரித்து சொல்லும் கலையில் வல்லவர்கள் என்னதான் உண்மை வரலாற்றை நாம் எழுதினாலும் திருந்தப் போவதில்லை. ஆனாலும் நாம் எழுதுவது உண்மையில் வரலாறு தெரியாதவர்கள் இவர்கள் எழுதும் பொய்களை நம்பிவிடக்கூடாது என்பதற்குத்தான்.

செய்ய கூடாததை செய்தவர் ராஜிவ் , செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். திருக்குறள் கூறியுள்ளது செய்ய வேண்டியதை செய்யாதவர்களும், செய்ய கூடாதவற்றை செய்பவர்களும் கெடுவர் என்பது.

Helper said...
This comment has been removed by the author.
Anonymous said...

Tamilelam is for whom?.What is the agenda for malaiyaga tamilargal and TAMIL Muslims.LTTE is another form of pro-hindu chavanist group which is clear from its killing the leftist,dalits,muslims and progresssive leaders which is clear from the support they receive from parties like RSS,BJP,Shiva sena.Anywayif one dig into the killing of Suba.Tamilselvan and the Karuna's seperate LLTE,shows the neglected face of dalits and their growing dominance and the consequence thereof.Why is the LTTE is faling to open it's account in dalit dominated eastern parts after Karuna's exit.Why do still north dominated tamils cannot winover other tamils support.Why is there so much support from tamilnadu after each incidents of setback with supporters like MDMK,DPI,PMK,ACTORS/directors,why and how do money is pumbed for their voice and protest,etc..., will give lots of answers..Anyway,tamil people of Srilanka need justice and dignity is unquestionable but exploring the answers for LTTE activities are questionable.

கையேடு said...

இனவெறிக் கொள்கைகளை எதிர்ப்பவர்களைக் கையாளவும், திசைதிருப்பவும், இறையாண்மை, அரசியல், என்ற விவாத முகமூடிகளைக் கொண்டு அவற்றை நீர்த்துப் போகச் செய்வதும் இனவெறி அமைப்பின் செயல்பாடுகளுள் ஒன்றே.
நிற்க.

எதிர் கருத்துக்களைப் பதியவைத்த நண்பர் பால்ராசுக்கு நன்றி.

கையேடு said...

// Anonymous said...

Tamilelam is for whom?//

கடைசியாக வந்துள்ள அனானிக்கு.

உங்களது இக்கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது. ஆனால், ஒருவேளை தனி ஈழம் என்று ஒன்று உருவானாலும் அது எப்படிப்பட்ட அல்லது யாருக்கான ஈழமாகயிருக்கும் என்பதை அம்மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

//Anyway,tamil people of Srilanka need justice and dignity is unquestionable//

உங்களது இக்கண்ணோட்டத்தில் மட்டுமே இப்பதிவும் எழுதப்பட்டது
நன்றி.

கையேடு said...

நண்பர் அகில் அவர்களுக்கு,

பதிவு குறித்த உங்களது கருத்துக்கு நன்றி.

உங்களது பெயர்க்காரணங்கள் என்னளவில் தேவையற்றதும் கூட.

Helper said...

///கையேடு said...
நண்பர் அகில் அவர்களுக்கு,

பதிவு குறித்த உங்களது கருத்துக்கு நன்றி.

உங்களது பெயர்க்காரணங்கள் என்னளவில் தேவையற்றதும் கூட.

November 3, 2008 11:05 AM///

I have edited the my earlier response and deleted the old one, as you care less about issues other than your subject of interest. I certainly understand that it has nothing to do with you! My aplogies! Take care! :)

----------------

Response posted earlier (November 2, 2008 9:00 AM) is edited as suggested by the blogger!

அகில் said...
It is a well-written, not too agressive but seriously concerned view, "kaiyEdu"!

I find now TN people come forward and express themselves.

Yes, enough blood has been spilled. It is time to stop and let them live happily with thamizh eezam! Hope it happens pretty soon.
---------------

கையேடு said...

தங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி திரு.அகில்.

Anonymous said...

Cornering Prabhakaran

EXCLUSIVE: FROM THE LANKA BATTLE ZONE

Click on blow link to read the full article:

http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=18994&issueid=78&sectionid=3&Itemid=1

Anonymous said...

உங்கள் பதிவு நியாயமாக உள்ளது..

கையேடு said...

நன்றிங்க தூயா.

ஜோதிஜி said...

ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..