Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, January 31, 2011

தமிழீழப் பெண்களும் அவர்கள் வேற்று மொழி உள்வாங்குதலும்

சமீபத்தில், மேலேயுள்ள தலைப்பில் ஒரு உரையைக் கேட்க நேர்ந்தது. உரையைக் கொடுத்தவர், மும்பையைச்(பிறந்து வளர்ந்த) சேர்ந்த தமிழ்ப் பெண். அவரது உரை மேலே குறிப்பிட்ட பொதுவான தலைப்பின் அடிப்படையிலேயே இருந்தாலும், அவரது ஆய்வு தமிழீழப் பெண்களின் சமூகப் பிண்ணனியும் (ஜெர்மானிய) மொழியை உள்வாங்குதலும், என்ற நுட்பமான கருவை நோக்கியது. அவரது உரையின் சில முக்கியப் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ளவே இவ்விடுகை.

சமூகப் பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டதாலும், ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றி அறிந்திருந்ததாலும், பெண்களிடம் மட்டுமே உரையாடுவது என்று குறுக்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆய்வு முறையானது, உரையாடலுக்குத் தயாராகயிருக்கும் பெண்களைத் தேடிக்கண்டடைவது, குறிப்பாக, ஈழத்திலிருந்து வெவ்வேறு கால கட்டத்தில் வெளியேறிய பெண்களுடன் உரையாடுவது, அவர்களது மொழி அறிவு குறித்து உரையாடுவது என பிரித்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.

இங்கே வெவ்வேறு காலகட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களில் ஒன்று, 1983 ஜூலை நிகழ்வுக்குப் பின் வந்தவர்கள் பற்றியும், 2000 மாவது ஆண்டிற்குப் பின் ஜெர்மனியில் குடியேறியவர்கள் பற்றியுமானதாக இருந்தது. நோக்கம் இரண்டு தலைமுறைகளும் எப்படி இங்கு வேற்று மொழியை உள்வாங்குகிறார்கள் என்பதில் வேறுபாடுகளைக் கண்டடைவது. மற்றொன்று, ஜெர்மானிய அரசு, தனது அனுமதி வழங்குதலில்
ஜெர்மன் மொழிப் பயில்வதைக் கட்டாயமாக்கியதற்கு முன்னும் பின்னும் எனும் துணைக்காரணிகள் உள்ளடக்கியது.

மொழிப் பயிற்சியைக் கட்டாயமாக்கும் முன் அவர் ஜெர்மனி வந்தபின் மொழியை உள்வாங்குவார் அம்மொழி பேசப்படும் ஒரு சூழலில், கட்டாயமாக்கிய பின், அவர் இலங்கையிலேயே மொழி வகுப்புக்குச் செல்வார். அதாவது ஒரு மொழியை வேற்றுப் பிரதேசத்தில் உள்வாங்குவதற்கும், அதே மொழியை அம்மொழி பேசப்படும் நிலப்பிரதேசத்தில் உள்வாங்குவதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைக் கண்டடைவது, என ஆய்வின் உட்பிரிவுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

உரையாடல்களில் என்னைக் கவர்ந்த மற்றும் தமிழ்ச் சமூகம் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு பெண்களின் உரையாடலை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

உயர்ந்ததாக அறியப்படும் சாதியில் பிறந்த ஒரு பெண், தனக்கு இங்கே, படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுமதிகள் மறுக்கப்படுவதும், கட்டுபாடுகள் விதிக்கப்படுவதும் எண்ணிப்பார்க்கவே முடியாததாய் இருந்தது. அங்கே சமூக அங்கீகாரமும் பெருமைக்குமுரிய சாதியிலும் இருந்துவிட்டு இங்கு வந்து இருக்கும் நிலையை உள்வாங்கிக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தாழ்ந்ததாக அறியப்படும் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளான சாதியில் இருந்து வந்த பெண்மணி, இங்கே மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், சுயசிந்தனையோடும் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இலங்கையில் எழுதப் படிக்கத் தெரியாத தான், இங்கே(ஜெர்மனி) ஒரு குடும்பத்தையே சமாளிப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி எனது பார்வை:

இவ்வுரையில், மொழியியல் வல்லுனர்களுக்கு எதுவும் புதிய செய்திகள் இருந்திருக்காது என்றுதான் எண்ணுகிறேன். ஆனால், பொது மக்களும், பல்வேறு துறை சார்ந்தோரும், பல்வேறு தேசத்தினரும், கூடும் ஒரு அரங்கில், கிடைத்த வாய்ப்பில் இலங்கை அரசின் மொழிக்கொள்கை, கறுப்பு ஜூலை, மற்றும் சுதந்திரத்திற்கு முன்னைய மக்கள் நிலையென, இலங்கையின் சமூக அவலத்திற்கு பெரும்பான்மையான நேரம் ஒதுக்கி, முக்கியப்படுத்தி உரையாற்றியது, தமிழனின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டால், மிகவும் பாராட்டத்தக்கதும் தேவையானதும் கூட.


மேலேயுள்ள இருவேறு பெண்களின் குரல்களிலிருந்து தோன்றிய எண்ணம் :

தமிழன் தன்னை மொழிஅடிப்படையிலான ஒரு இனமாகக் கருதி தனக்கான இக்கட்டான சூழல்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டுமாயின், தனது தொன்மங்களை அப்படியே சுமந்து திரியாமல், மீள்பரிசோதனை செய்து கொண்டு, உலகளாவியதொரு பார்வையோடு ஒன்றிணைந்து சமூகத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.


Saturday, October 24, 2009

சுவர் சித்திரங்கள்

எனது வீட்டின் சுவற்றில் வெவ்வேறு சித்திரங்களை மாட்டினேன். முன்பொரு நாளில் பாதகங்களை நிறுத்தச் சொன்னேன், பின்னொரு நாளில் சகோதரனுக்கு அஞ்சலியென்றேன், பின்னர் குன்றின் மேலேறி உலகுக்கான அறைகூவல் விடுக்குமொரு சித்திரம் மாட்டினேன். பின்னர், அமைதியாக கீழிறங்கி உறவுகளுக்கான கண்ணீர் அஞ்சலி அட்டை வைத்தேன், முள்கம்பி பற்றியதொரு புதிய சித்திரத்தை எங்கே மாட்டுவது என்று யோசிக்கிறேன்.

எப்போதும், இப்போதும் முட்கம்பிகளுக்குப் பின்னாலிருந்து ஒரு குழந்தை வெறித்துக் கொண்டேயிருக்கிறது, "அடுத்தது என்ன வைப்பான் என்று???"....

Monday, June 8, 2009

இலங்கை - கற்பிதங்கள் 10



இலங்கையில் நடந்த போரும் அதன் முடிவும் பற்றி "திரு. சத்யா சாகர் " அவர்கள் எழுதிய "கற்பிதங்கள் 10" என்ற கட்டுரையொன்று கீழுள்ள சுட்டியில். ஒரு பகிர்வுக்காக இங்கே...

முழு விபரமும் இங்கே - " http://transcurrents.com/tc/2009/06/the_ten_great_myths_of_modern.html "

சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் இங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன்.
**********************************************************************************

"The Ten Great Myths of Modern Sri Lanka"

- By Satya Sagar

Myth One: The Sri Lankan government is/was at war with the LTTE:
"...............................If the LTTE has used terrorist methods to further its cause there is no doubt that the Sri Lankan government has used genocidal methods to put them down................."


Myth Two: The Mahinda Rajapakse government has ‘won' the ‘civil war' and successfully prevented the division of Sri Lanka :

"......How many governments herd all citizens of a linguistic minority into concentration camps to be treated as terrorists simply because of their identity? And after doing all this what right do they have to call themselves ‘one nation'?......"


Myth Four: The Sri Lankan Tamils will gang up with Indian Tamils and create a ‘Greater Tamil' nation:

"..........................they have not really done much for them. Over the past twenty years there are thousands of Sri Lankan Tamil refugees languishing in Tamil Nadu without proper shelters, livelihood, education for their children or even safety from arbitrary arrest by local police.............."


Myth Five: Sri Lanka has a special place in world Buddhism and its territorial integrity needs to be protected by the Sinhala people:

"...............These champions of Buddhism have no doubt become its greatest destroyers............"


Myth Seven: A majority of the Sinhalese people are racists and chauvinists:

".............Today most of these Sinhala people are also being held hostage by the fascist Rajapakse regime, which has turned Sri Lankan nationalism into a family-run dictatorship guarded by guns purchased with the people's own hard earned money.................."


Myth Nine - The Indian government, once supportive of the Sri Lankan Tamils, has turned against them:

"........ the Indian government does not really care for either the Sri Lankan Tamils or the Sinhalese for that matter. Like in most countries of South Asia successive Indian regimes too have only been bothered about preserving the power of the corporate or feudal elites and care little for their ordinary citizens........"

************************************************************************************

முழு விபரமும் இங்கே - " http://transcurrents.com/tc/2009/06/the_ten_great_myths_of_modern.html "

குறிப்பு: Myth - கற்பிதம் சரியான மொழிபெயற்பா..??

Thursday, June 4, 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளருபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..


"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"

இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விருப்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.


இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐநா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
"செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

இப்பத்திரிக்கையின் சுட்டியை இப்பதிவில் பகிர்ந்து கொண்ட திரு.நாகார்ஜுனன், மற்றும் தமிழாக்கத்தில் பங்குகொண்ட நண்பர் "பதி"க்கும் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்து உதவிய அவரது நண்பர்களுக்கும் நன்றி.

Thursday, May 28, 2009

ஒரு 2,50,000 கம்மியா இருக்கு

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணை செய்வதற்காக செய்யப்பட்ட கணக்கெடுப்பில், இரண்டரை லட்சம் தமிழர்களின் பிணங்கள் கம்மியாகயிருப்பதால் விசாரணை தேவையில்லன்னு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய வல்லரசுகள் கருதுகிறார்களாம்.

இதனையே ஐ.நா மன்றமும் கருதுவதால், இலங்கைஅரசு தம்மைத் தாமே விசாரித்துக் கொள்ளலாம், மேற்படி விசாரணை நடத்த வேண்டுமெனில் மேலும், 2.5 இலட்சம் பிணங்கள் வேண்டுமாம், அதில் ஒன்று குறைந்தால்கூட விசாரணை நடத்த முடியாது என்பதையும் ஐ.நா தெரிவித்துக் கொல்(ள்)கிறது.

**************
கடல் பகுதிக்கு நடக்கும் போட்டியைப் பார்த்தால், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள், ஆசியாவில் கடும் மூன்றாவது உலக யுத்தம் வந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.

Monday, April 20, 2009

ஈழம் - ஒரு கலந்துரையாடல்

சிலர் சர்வதேசம் என்கிறார்கள், சிலர் பூகோலம் தமிழர்களுக்கெதிரி என்கிறார்கள், இன்னும் சிலர் தீவிரவாதம் என்கிறார்கள். ஆனால், பால் மனம் மாறாக் குழந்தைகள் கூடக் கொன்று குவிக்கப் படுகிறார்கள்.

மேலும் சிலர் பரந்த மனப்பான்மை வேண்டுமென்கிறார்கள் ஒருவேளை மக்களைப் பரந்துபட்ட திறந்த வெளிச் சிறையில் அடைப்பதுதான் பரந்த மனப்பான்மையோ என்றுகூடத் தோன்றியது.

இன்று வரை தனி ஈழம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நம்பியிருந்தேன், இன்றும் அதையே நம்புகிறேன். ஆனால், எது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை ஈழத் தமிழர்தான் ஒன்றிணைந்து முடிவு செய்யவேண்டும்.

*************************************************************************************

தீர்வு எப்படி எழுதப்பட்டாலும், எழுதப்படப் போவதாகயிருந்தாலும், ஈழத்தின் போராட்டம் பற்றியும், இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்குள்ள உரிமை பற்றியும், அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் பற்றியும் மேலும் பலருக்கு அறியச் செய்யும் நோக்கில், ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேர உரையும், அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்குப் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரமும், கலந்துரையாடலையும்(ஆங்கிலத்தில்), பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் (Indian Institute of Science, Bangalore) சேர்ந்த, தன்னார்வம் கொண்ட மாணவர்கள் சிலர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி விபரங்கள் கீழ்வருமாறு.








Speaker: Dr. P. Sahadevan,

Professor of South Asian Studies,
South Asian Studies division,
School of International Studies,
Jawaharlal Nehru University, Delhi.

http://www.jnu.ac.in/FacultyStaff/ShowProfile.asp?SendUserName=sahadevan


Date: 22nd April 2009

Time: Talk - 6:00 pm followed by question/open discussion session

Venue: Department of Physics, Lecture hall, IISc, Bangalore.


About the Speaker:

P. Sahadevan is Professor of South Asian Studies (since May 2003) and currently Book Review Editor of International Studies, an academic journal published by Sage, New Delhi. He held visiting fellowships at the University of Kent at Canterbury, U.K. (1993-94) and the Joan B. Kroc Institute for International Peace Studies, University of Notre Dame, USA (1998).

மேலதிகத் தகவல்கள், அவரது புத்தகங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய விபரங்களுக்கு :
http://www.jnu.ac.in/Faculty/sahadevan/

*************************************************************************************
பேராசிரியர் சகாதேவன் அவர்களின் உரைச் சுறுக்கம் விரைவில் இதே இடுகையில் சேர்க்கப்படும்.

இதில் பெங்களூருவில் இருக்கும் பதிவர்கள், நண்பர்கள் எனப் பொதுமக்களும் பங்குகொள்ளலாம்.

தற்செயலாகவோ அல்லது இதில் பங்குகொள்ளவோ, சென்னை மற்றும் பிற நகரத் தமிழ்ப் பதிவர்கள், பத்திரிக்கையாள நண்பர்களுள் சிலர், பெங்களூரு செல்வார்களெனில் கீழ்கண்ட தகவல்கள் உபயோகமாகயிருக்கலாம்.

How to reach IISc?

http://www.iisc.ernet.in/content_geninfohowtoreach.html

மேலுள்ள சுட்டியில், இரயில், பேருந்து, வானூர்தி, சொந்த வாகனம் என அனைத்துக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது.

Route Map:

http://www.iisc.ernet.in/images/campus_route.jpg

கீழுள்ள சுட்டியில் இந்திய அறிவியல் கழக வளாகத்தின் வரைபடம் உள்ளது. இயற்பியல் துறையை எளிதில் கண்டடைய பயன்படலாம்.

http://www.iisc.ernet.in/content_geninfocampusmap.html

*************************************************************************************

இந்நிகழ்ச்சியின்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் சிறிது வரலாறும் இணைத்து மூன்று பக்கங்களில் ஆங்கிலத் துண்டறிக்கைகள் இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளன. அவை உங்கள் பார்வைக்கு.


பக்கம் 1:


பக்கம் 2:




பக்கம் 3:

இவ்வுரையையும், கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Wednesday, October 22, 2008

ஈழம் - ஒரு பதிவு

Mike அவர்களின் ஈழம் குறித்த பதிவிற்கான அழைப்பைத் தொடர்ந்து இப்பதிவு.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையின் வேர் என்ன?, என்பது குறித்த வரலாற்று உண்மைகள் எதுவாகயிருந்தாலும், அங்கே போராடும் குழுக்களின் போராட்ட வழிமுறைகள் எப்படியாயினும், அங்கே இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதையும் அங்கே தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டியதற்கு அவசியமான சூழலையும் உருவாக்கியது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பை முனைப்புடன் செய்கிறது என்பது கண்கூடு. தமிழர் என்றில்லாமல், அண்டை தேசத்திலிருக்கும் எந்தவொரு இனமாகயிருந்தாலும், இப்படியானதொரு இன அழித்தொழிப்பு நடைபெற்றால் அதனை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே ஒரு இந்தியப் பிரஜையாக எனது விருப்பமாகயிருக்கும். அப்படியிருக்கையில், அதனை எதிர்க்காவிட்டாலும் அதற்குத் துணைபோகும் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அதற்கான எனது கண்டங்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.நிற்க.

வன்மக்கணக்குகளை இரண்டு பக்கங்களிலும் சரிபார்த்துக் கொண்டுபோகாமல், சமரசமாக இலங்கையில் எல்லோரும் வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள் பலநூறுமைல்கள் தள்ளியிருக்கும் சில வரையறை சார்ந்த காந்தியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது அதிகம், அதனால் அவர்கள் மனதளவில் சமரசம் அடைய வேண்டுமெனில், தனி ஈழம் அளிப்பதோடல்லாமல், இப்படியான இன அழித்தொழிப்பை மேற்கொண்டதற்காக, முறையாக இலங்கை அரசு (அதற்கு துணை போன இந்திய அரசும்) தமிழ்மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மன்னிப்புக் கோருவதோடல்லாமல், அவ்வரசு வெட்கிக் குறுகிச் சிறுமைப்படவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுமா... ?? கால மாற்றத்தில் விடையிருக்கலாம்.

ஈழம் என்றில்லை எங்குமே ஒரு இனத்தை அழிக்க முற்படும் எந்தவொரு இனமும் அதற்காக வெட்கித் தலைகுனிந்து, பொதுவில் அதற்கான வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரினால் மட்டுமே சமரசத்திற்கான தளத்தில் நம்பிக்கை பிறக்கும். இது வரலாறு புகட்டும் உண்மையும் கூட.

ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..

4Nov2008 அன்று சேர்க்கப்பட்டது:
இதையும் கொஞ்சம் வாசிங்க
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - நாகார்ஜுனன்