Wednesday, August 12, 2009

எனது உடல் எனது ஆயுதம்

இது எனக்கு நான் அளித்துக்கொள்ளும் தண்டனையல்ல.. இது எனது கடமை..

"That very happy day will come one day"... ஷர்மிளா.
உங்களது போராட்டம் வெற்றிபெறும்/பெறவேண்டும்.

*************************************************************************************


************************************************************************************
மனிதர்கள் கரணம்
குரங்குகளின் கைகளில் துப்பாக்கிகள்
-மணிப்பூர்...

நேருக்களும், கலாம்களும் கண்ட கனவு இந்தியா இதுஎனில்.. மன்னிக்கவும்.. மக்களின் கனவு வேறாகயிருக்கிறது.

மணிப்பூர் தொடர்பான வேறுசில பதிவுகள்:

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் - சுடர்


இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

Monday, August 3, 2009

19 ஜூலை 2009 ஜுபீடரில் நடந்தது என்ன???

19ஜூலை 2009, ஆஸ்திரேலியாவிலுள்ள தொடக்க நிலை வானியல் ஆய்வாளரான "Anthony Wesley" என்பவர் தனது விட்டின் கொள்ளைப்புறத்திலுள்ள தனது தொலைநோக்கி மூலம், ஜுபீடர் கோளை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் ஜூபீடரின் செந்நிற உதயத்தில் தனது கவனத்தைக் கொண்டிருந்த போது, ஜூபீடரின் தென் துருவத்தில் ஒரு கரிய புகைமண்டலத்தைக் கண்டிருக்கிறார். இது ஜுபீடரில் தோன்றும் வழக்கமான புழுதிப்புயல் என்று எண்ணி அதனை முதலில் புறக்கனித்திருக்கிறார்.

பின்னர் பூமியை நோக்கி ஜுபீடர் முழுவதுமாகத் திரும்பியதும் அங்கே தோன்றிய கருமேகம், அது வழக்க
மான நிகழ்வல்ல என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.



Above: South is up in this July 19th discovery image taken by Anthony Wesley using a 14.5-inch telescope in Murrumbateman, Australia.


"It was an impact mark. Something hit the giant planet!"

அவர் 1994 ஆம் ஆண்டு ஷூமேக்கர் லெவி-9 என்ற எரிவிண்மீன் (comet) தாக்கிய போது ஏற்பட்ட விளைவுகளையும் அவதானித்திருந்தார். அவ்வனுபவத்தில், அவர் இப்போது காண்பதுவும் ஏதோவொரு பாரிய மோதலின் பின்விளைவு என்பதைத் தெளிவாகக் கண்டுகொண்டிருக்கிறார்.

பின்னர் தான் கண்டதையும் சில புகைப்படங்களுடன் தமது வானியல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில் இது ஒரு எரிவிண்மீனாகவோ அல்லத் எரிகல்லாகவோ இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. எப்படியும் சில நூறு மீட்டர்கள் குறுக்களவுள்ள ஏதோவொன்று ஜுபீடரைத் தாக்கியிருக்கிறது என்றும், இதே அளவிளானது பூமியைத் தாக்கியிருந்தால், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி முழுவதுமாக அழிந்து போயிருக்கும் என்றும், ஒருவேளை கடல்பகுதிகளில் மோதியிருந்தால், மீண்டுமொரு மிகப் பெரிய சுனாமி தோன்றி அழித்திருக்கவும் வாய்ப்புண்டு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அதே நேரம் 20 ஜூலை 2009 அன்று, நாசாவின் வேறுசில விஞ்ஞானிகளும் ஜுபீடரைக் கண்காணிப்பதற்குப் பணிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இம்மோதல் நிகழ்ந்ததற்கான பின்விளைவுகளை அவதானித்து உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.


Right: An IRTF image of the Jupiter impact debris cloud on July 20, 2009. The cloud appears bright at this wavelength (2.12 microns) because particles in the cloud are reflecting infrared radiation from the sun, explains observer Glenn Orton.





ஜுபீடரின் மேல் மோதியது எதுவாகயிருந்தாலும், அது இப்போது தூள்களாகச் சிதறியிருக்கிறது என்றும், அதன் சிதறல் எச்சங்களையும், அது ஜுபீடரின் பரப்பில் ஏற்படுத்திய பாதிப்பையுமே நாம் இப்போது கண்டுகொண்டிருக்கிறோம் என்று குறிப்பிடுகின்றனர்.

நாசாவின் புகழ்பெற்ற ஹப்பில் தொலைநோக்கி இந்த ஆண்டு மேமாதம் முதல், பராமரிப்பு பணிகளுக்காக முழுவீச்சில் இயங்காமல் இருந்ததாகவும், அதனால், ஜுபீடரின் மேல் மோதியது எது என்று நமக்கு எவ்விதமான முன்னறிவும் கிடைக்காமல் போய்விட்டது என்றும், ஆனால், வெஸ்லி தான் கண்ட புகைப்படங்களை அனைவருக்கும் அனுப்பிவைத்ததும், 23ஜூலை முதல் ஹப்பில் தொலைநோக்கி அக்கரிய மேகத்தைப் பற்றி ஆய்வு செய்ய முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், ஜுபீடரில் மோதியது எது என்பது பற்றியும், அது எங்கிருந்து வந்தது என்பதுபற்றியும் பூமியில் உள்ள விஞ்ஞானிகளிடம் எவ்விதமான தகவல்களும் இல்லாமல் போனது, பூமிக்கு மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது ஜுபிடரில் தோன்றியிருக்கும் "வெஸ்லி துகள் மேக"த்தினை தொடர்ந்து அவதானித்து வருகின்றனர். அதன் கருப்பொருள், மோதிய பொருளின் கருப்பொருள் எனப் பலவற்றை ஆய்ந்து வருகின்றனர் வானியல் விஞ்ஞானிகள். இதற்கு முன்னர் SL-9 எனப்படும் எரிவிண்மீனின் மோதலில் கிடைத்த அனுபவத்தின் மூலம் இக்கரிய மேகம் இன்னும் ஓராண்டுக்கு மேல் ஜுபீடரின் பரப்பில் காணமுடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஜுபீடரில் நிகழ்ந்திருக்கும் இம்முக்கிய நிகழ்வு பற்றி எவ்வித முன்னறிவும், எது மோதியது என்பதுவும், அறிய முடியாமல் போனது துரதிஷ்ட வசமானது என்பதும் குறிப்பிட்டுள்ளனர்.


Above: A Hubble Space Telescope image of the Jupiter impact scar taken on July 23, 2009, taken using Hubble's new camera, the Wide Field Camera 3 (WFC3).

இதைப்பற்றி திரு. அந்தோனி வெஸ்லி குறிப்பிடுகையில், நான் இப்போது தினமும் ஆர்வத்துடன் அக்கரிய மேகத்தைப் படம்பிடித்து வருகிறேன் என்று குறிப்பிடுகிறார் மேலும்,

"I wonder," "what will happen next?" என்றும் குறிப்பிடுகிறார்.


தகவல் மூலம்:
What Hit Jupiter? http://science.nasa.gov/headlines/y2009/03aug_whathitjupiter.htm?list1301990

***************************************************************************************
வானியலின் தூர அளவுகளுடன் ஒப்பிட்டால், மயிரிழையில் பூமி தப்பியிருக்கிறது என்று சொல்லலாம். ஒருவேளை சமீபத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தில் தனது முழு கவனத்தையும் விஞ்ஞானிகள் மையப்படுத்தி விட்டார்களோ என்னவோ?? எப்படியும் ஒரு மிக முக்கியமானதொரு வானியல் நிகழ்வைத் தவறவிட்டிருக்கிறார்கள்/தவறவிட்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

ஜுபீடர் நமது சூரிய குடும்பத்தின் வரிசையில் ஐந்தாவது கோளாகும். மேலும், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளும் ஜுபீடரே. ஜுபீடர் பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம். http://www.nineplanets.org/jupiter.html

இதற்கு முன்னர் 1994 ஆண் ஆண்டு ஜுபீடரில் நடைபெற்ற மோதலின் போது எடுத்த புகைப்படங்கள் சில:


புகைப்படம்:http://www.midnightkite.com/sl9.html