Thursday, June 10, 2010

எதிர் கேள்விகள் - மின்னஞ்சலில் வந்தது

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் குழுமத்தில் கொலம்பஸிற்கு திருமணம் ஆகியிருந்தால் அவரது மனைவி கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் என ஒரு பட்டியல் அனுப்பினார். உடனடியாக அதற்கு எதிர்வினையாக தோழி ஒருவர்,
திருமதி கொலம்பஸ் எவ்வகையான கேள்விகளை எதிர்நோக்கியிருப்பார் என ஒரு பதிலுரையை அனுப்பினார். உங்கள் பார்வைக்கு இங்கே இரண்டும்.
------------------------------------------------------------------------------------------------

கொலம்பஸ் எதிர்நோக்க வேண்டியிருந்த கற்பனைக் கேள்விகள்

எங்கே போகிறாய்?

யாருடன் போகிறாய்?

ஏன் போகிறாய்?

எப்படிப் போகிறாய்

எதைக் கண்டுபிடிக்கப் போகிறாய்?

ஏன் நீதான் போகவேண்டுமா?

நீ இல்லாத போது நான் என்ன செய்வது?

நானும் உன்னுடன் வரலாமா?

எப்போது திரும்புவாய்?

இரவு உணவுக்கு வருவாயா?

எனக்கு என்ன கொண்டு வருவாய்?

நீ வேண்டுமென்றே என்னைத் தவிர்த்து பயணம் செய்கிறாய் இல்லையா?

நீ இது போன்ற பயணங்களைக் கடைசி நேரங்களில் செய்கிறாய்

எனக்கு பதில் சொல்?

நான் என் தாயார் வீட்டுக்குப் போக வேண்டும்.

என்னை அங்கு விட்டுவிட்டுச் செல்

எனக்குத் திரும்ப வரவே விருப்பமில்லை.

சரி. என்றால் என்ன அர்த்தம்?

ஏன் என்னை மறுக்காமல் இருக்கிறாய்?

என்ன கண்டுபிடிப்போ? என்னவோ? எனக்குப் புரியவில்லை

நீ எப்பவும் இப்படித்தான் செய்கிறாய்

சென்ற முறையும் நீ இப்படித்தான் செய்தாய்.

இப்போது நீ அடிக்கடி இது போலச் செய்கிறாய்.

இன்னும் என்னதான் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறதோ எனக்குப் புரியவேயில்லை.

****************************************************************************

இதுவே திருமதி கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்காக கிளம்பியிருந்தால் எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் கேள்விகள் என தோழி எழுதியவை.


"இது திருமதி கொலம்பஸ் என்றில்லை எந்த திருமதியானாலும் கீழ்க்கண்ட கேள்விகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்" - தோழி

குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?

என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்?

நீ இப்படி போகிறேன் என்றால் என் பெற்றோர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

உன்னுடைய பொறுப்புகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்ள முடியாது.

நீ நெடுங்காலம் வராதிருந்தால் நான் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கலாமா?

நீ உன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது, மொத்தக் குடும்பத்தையும் சேர்ந்து சிந்திக்க வேண்டும்.

நீ போவதால் எனக்கோ எனது குடும்பத்திற்கோ என்ன லாபம்?

"அதனால், ஆண்கள் மட்டும் இதுபோன்ற கேள்விகளை எதிர்நோக்குவது கிடையாது, ஒரு கண்டுபிடிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் பெண்கள் சந்திக்கும் கேள்விகளும் அதிகம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "- தோழி

********************************************************************************

கொலம்பஸ் எதிர்நோக்கிய கேள்விகள் பற்றி நேற்றோ முந்தைய தினமோ வலைப்பதிவுகளில் வாசித்ததாக நினைவு. எந்தப் பக்கத்தில் என்று உடனடியாக நினைவுக்கு வரவில்லை, பின்னூட்டத்தில் யாராவது தெரிவித்தால் சுட்டியைச் சேர்த்து விடலாம்.

கண்டுபிடித்துவிட்டேன் திரு கேபிள் சங்கர் அவர்களின்
- கொத்து பரோட்டா-08/06/10 இல் சிறுபகுதி இருக்கிறது

2 comments:

பதி said...

கொலம்பஸ் சந்திக்க வேண்டியிருந்த கற்பனைக் கேள்விகளைப்
படித்தவுடனேயே எனக்கு குடும்பம் சார்ந்து எழுந்த கேள்விகளும், அது தனி மனிதனுக்கு எழுப்பும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆண்கள் சார்ந்தே அமைந்தது உண்மை !!!

ஆனா, காமெடிக்கு கூட இனி ஒரு விசயத்த பகிர முடியாது போல இருக்கேப்பா ???
:(

நல்லவேளை, ஆணாதிக்கவாதின்னு போட்டு குமுறாம விட்டாங்களே.. அந்த வகையில சந்தோசம் தான் !!!! :)

கையேடு said...

//போட்டு குமுறாம விட்டாங்களே.//

அட அதுக்குள்ள நீங்களா முற்றும் போட்டிகிட்டிங்களா.. இருங்க இன்னும் எவ்ளோ வரவேண்டியிருக்கு.