Monday, September 13, 2010

இளங்கலை கணிதம் மாணவர்களுக்கு - ACM2010


இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்களுக்கு, Indian Institute of Mathematical Sciences, Taramani யில் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. அறிவியலில் கணிதத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக "Algebra and Analysis" இல் மாணவர்களின் புரிதலையும் பங்களிப்பையும் ஊக்கப்படுத்தும் முகமாக இப்பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.(பெரிது படுத்திப்பார்க்க புகைப்படத்தின் மேல் அழுத்தவும். கீழே சுட்டியில் தெளிவான வண்ணப்படம் காணக்கிடைக்கும்)

அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வி நிறுவனங்களில் துறை முதல்வரின் பரிந்துரையுடன், இறுதியாண்டு இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு கூறுகிறது. மேலும், Federation of Science clubs of Tamil Nadu (FSCT) இல் ஏற்கனவே உறுப்பினராக இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 20 -24 , 2010 ல் காலை 9 - மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு குறிப்பிடுகிறது.

பதிவுசெய்தல் அனைவருக்கும் இலவசம் எனவும், பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் கல்விச்சாதனங்கள், பங்கேற்புச் சான்றிதழ், சிற்றுண்டி, மற்றும் உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.



கீழுள்ள சுட்டியில் இப்பயிற்சி வகுப்பு குறித்து மேலதிகத் தகவல்கள் பெறலாம் :
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010Poster.pdf
(மேலே புகைப்படமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.)

கீழுள்ள சுட்டியில் விண்ணப்பப் படிவம் கிடைக்கிறது:
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010RegistrationForm.pdf

உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டிலோ அல்லது நட்பு வட்டத்திலோ யாருக்கேனும் பயன்படலாம், என்ற நோக்கில் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. டில்லி பாபு அவர்களுக்கு நன்றிகள்

4 comments:

பதி said...

பகிர்தலுக்கு நன்றி. பலருக்கும் அறியத் தந்துள்ளேன் !!! :))

கையேடு said...

நன்றி பதி.

தருமி said...

பதி சொன்னதே ..........

கையேடு said...

நன்றிங்க தருமி சார்.