Monday, January 28, 2019

மாயக்குதிரை - தமிழ்நதி

நான் தீவிர வாசிப்பாளன் கிடையாது என்பதால் பெரும்பாலும் புத்தகங்களை வாசித்துவிட்டு மறந்துபோவதோடு சரி. (தருமி சாருக்கு நன்றாகத் தெரியும் ;)) இனி வாசித்த புத்தகங்கள் பற்றிய  எனது எண்ணங்களை இங்கே பதிந்து வைக்கலாம் என மீண்டுமொரு துவக்கம். கூடுமானவரை உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன்.

மாயக்குதிரை | MAAYAKKUTHIRAI: சிறுகதைகள் | SHORT STORIES (Tamil Edition) by [THAMIZHNATHY, தமிழ்நதி]

மாயக்குதிரை - தமிழ்நதி.

இவரது பூனைக்குட்டி பதிவுகள் மூலம்தான் முதல் அறீமுகம். பின்னர் முகப்புத்தகம் மற்றும் இவரது பல பதிவுகள் மூலம் இவரது அரசியல் எழுத்து என மிகவும் நெருங்கிய நபர் என்ற உணர்வைத் தருபவர்.  இவரது பார்த்தீனியம் நாவல் குறீத்த சில சிலாகிப்புகளை  வாசித்து, அந்நூலை வாசிப்புப் / வாங்கும் பட்டியலில் வைத்திருந்தேன். ஆனால், எதேச்சையாக சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தில் மாயக்குதிரையைத் தேர்வு செய்து, பார்த்தீனியத்தைப் பின்னுக்கு தள்ளீவிட்டேன். சரி மாயக்குதிரைக்கு வருவோம்..

இந்நூலை வாசிப்பனுபவம் அல்லது பொழுதுபோக்கு அம்சமாகத்தான் அனுகிணேன். I was totally wrong.. அதேசமயம் இது ஒரு புனைவு அல்லது கற்பனையில் தோன்றீய சிறூகதைகள் என்றூம் என்னால் நம்ப இயலவில்லை. படைப்பாளியின் பாத்திரங்களில் தமிழ்நதியினைக் காணலாம், அது இலக்கிய உலகில் நடப்பதுதான். ஆனால் இக்கதைமாந்தர் பலர் உயிரும் சதையுமாக வாழ்ந்திருக்கக் கூடியவர்களே, எல்லாமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதை (நான்)நம்புவதற்கில்லை.

இந்நூல் என்னளவில் ஒரு உளவியல் ஆவணம். ஈழத்தமிழர்கள் குறித்த அரசியல் ஆவணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பலவாண்டுகள், போரினால் சீரழிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தினரின் குடும்பம், சமூக உளவியல், உறவுக் சிக்கல்கள் என பாத்திரப் படைப்புகள் நீள்கிறது. இந்நூலிலுள்ள படைப்புகள் ஈழப்போரட்ட காலகட்டதிற்கான அகம் சார்ந்த  ஆவணங்களில் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். 

சயந்தனின் 'அவள்' என்ற பாத்திரத்தை பாரிசிலோ, டொரண்டோவிலோ புலம்பெயர் தமிழர் கூட்டத்தில் நீங்கள் சந்திக்க நேரிடலாம். இப்புத்தகத்தை வாசித்தபின் 'அவள்' பற்றிய உங்கள் பார்வை மாறலாம், மாறாமலும் இருக்கலாம். என்ன குழப்புகிறேனா.. ? இப்படித்தான் பல இடங்களில் வாக்கியத்தின் முடிவில் நுட்பமான நேர்த்தியோடு திருப்பிபோடுகிறார் தமிழ். 
சிதம்பரம் ஆச்சியின் மரணத்தைப் புதிராகவே விட்டுச்சென்றது ஒரு ஆசுவாசம். புலம்பெயர் தமிழர் மற்றும் தங்கிப்போன மக்களூக்கிடையே உள்ள உளவியல் சிக்கலை மைதிலியினுடனான கணநேர உரையாடலில் சொல்லிவிட்டு நகர்கிறார். புலம்பெயர் தமிழரின் பொருளாதாரச் சிக்கலையும் அதனைத் தொடர்ந்து நிகழும் உறவுச் சிக்கல்கள் எனப் பலவற்றை தொட்டுச் சென்றுவிட்டார்  அவரது கதாப்பாத்திரங்களுள். 
புத்தர் கடிகளின் இரணத்தின் மூலம் இராணூவ அரசியலின் வலியை ராசத்தியினூடே கதைத்துச் செல்கிறார். 
'ழ'கரமில்லாமல் தமிழில்லை என்பது போல பூனையில்லாமல் தமிழுமல்ல (thanks to FB) அவரது படைப்புகளூம் இருக்காது போல.
'பொறுப்பேற்றலில் முதன்மையானது செவிமடுப்பது', பெண் வேசி ஆண் மட்டும் மாமன்னனா..? என்பவை போல பல இடங்களில் மிகவும் நுட்பமான மனவினைகளை வார்த்தைகளாக்கியிருக்கிறார், அதோடு உரையாடலுக்கான சாத்தியங்களை விட்டுச் செல்கிறார். சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன் என்ற யதார்த்தப் பின்னணியில் பாத்திரங்களைப் புனைந்திருக்கிறார். இயக்கங்களூக்கான தேவையை நுட்பமான பாத்திரப்படைப்புகள் மூலம் தர்க்கம் செய்திருக்கிறார். இந்த தர்க்கத்தையும் வேறு தொணீயில் துவங்கி முடிவில் புரட்டிப்போடும் விதமாகவே செய்திருக்கிறார். I am ok with it. Its her/their choice or they didn't have one.

ஓ.. அரசியல் பேசும் கதைகளா..? என்ற முடிவிற்கு வரவேண்டாம். எல்லாப் பாத்திரங்களின் ஆழ்மனதிலும், அதற்கான வெளியிருக்கிறது, கண்ணிருப்போருக்குத் தெரியலாம், தெரியாமலும் போகலாம். [Reader can choose (not) to]

குறைகள் கண்டுபிடிக்கும் அளவுக்கும் நான் தீவிர வாசிப்பாளன் கிடையாது, ஆனாலும்,  எனது மேம்போக்கான வாசிப்பில், எனக்குத் தோன்றியதைக் குறிப்பிடுகிறேன். பாத்திரப்படைப்புகள் (ஒரு சில) மற்றூம் கதையின் போக்கு எதிர்பார்த்த திசையிலேயே பயணீப்பதைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது. It is very predictable, so letting down at places.
இப்புத்தகம் நிச்சயம் ஈழத்தமிழர் குறித்து உலவும் பல தோற்றப் பிழைகளை போக்க வல்லது அல்லது அதற்கான தர்க்கங்களை முன்வைக்கிறது.  

மிகவும் நுட்பமாக அணூக வேண்டிய நூல், வாழ்த்துகள் மற்றும் நன்றிங்க - தமிழ்நதி.

பொ.துறப்பு : இப்படித்தான் இருக்கிறது என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குமாயின் அது எனது எழுத்தின் குறைபாடுதான், இப்படியும் இருக்கலாம் என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.

இ-கலப்பை கொஞ்சம் படுத்துகிறது - பிழைகளுக்கு மன்னிக்கவும்.

கின்டில் - https://www.amazon.in - கின்டில்

Thursday, January 3, 2013

பகிர்வு - ரிச்சட் டாகின்ஸ்..

பகிர்வுக்காக இக்காணொளி




:)

Thursday, November 15, 2012

கிரகங்களின் ஒன்றினைவு

இன்றைக்கு தமிழ்மணத்தின் முகப்பில் சாதிமறுப்புத் திருமணம் குறித்த ஒரு அறிவிப்புடன் ஒரு இடுகை இருந்தது..

அதன் சுட்டி இங்கே..

http://www.periyarthalam.com/2012/11/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/


உள்ளே நுழைந்தவுடன் அவர்களது விளம்பரப் பலகையில் ஒளிர்ந்தது மற்றுமொரு இணைய தள விளம்பரம் அது சுயமாக வெளித்தெரியும் விளம்பரம்தான்.. இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கே பதிகிறேன்.




சாதியத்தை ஒழிக்க நினைக்கும் ஒரு அறிவிப்பில் சாதியத்தைத் தாங்கிப்பிடிக்க பெரிதும் துணைபோகும் ஒரு தளத்தின் விளம்பரத்துடன் பார்த்ததும் பதிவிடத் தோன்றியது..


Monday, November 5, 2012

I-T ACT SECTION 66 A- பதிவர்கள் ஒன்று படுவோம்

கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் பொருட்டு நமது தருமி சாரின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்விடுகை.
========================================================
*



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

Monday, October 22, 2012

பரிணாமம் - டார்வின் - இன்னபிற - பகிர்வு

இன்றைக்கு நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் இக்கட்டுரையின் சுட்டியை பகிர்ந்திருந்தார்..

 ஓரிரு வரிகளுடன் அச்சுட்டியை இங்கே தருகிறேன்.

//Recently, the Karnataka government gave a lot of money to temples to appease the rain gods//

//And, yet, the fraction of people who are educated enough to understand science is minuscule//

//But educating them is not enough. We have to inculcate a proper scientific temper in them, help them use science and technology to rise out of their misery. Instead of spending thousands of crores on building nuclear weapons, the government should spend the money on primary education.//

////Einstein, arguably the greatest scientist in human history and my personal hero, termed belief in God “childish superstition.”//

முழுக்கட்டுரையும் கீழுள்ள சுட்டியில்..


Let’s ignore science at our peril -


http://www.thehindu.com/opinion/open-page/lets-ignore-science-at-our-peril/article4017252.ece


மற்றுமொருமுறை சங்கு ஊதப்பட்டிருக்கிறது.. காதுள்ளவரகளுக்கு கேட்கட்டும் என்ற " நம்பிக்கையில்".. :)

ஒருவேளை ஹிந்து நாளிதழைப் புறக்கணிப்போம் என்று பிரச்சாரம் தொடங்குமோ..

Sunday, November 6, 2011

கலாம் எனும் அறிவியல் சாமியார்


கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக - இன்றைய முக்கிய முகமாக முன்னிறுத்தப்பட்டிருப்பவர் கலாம் எனும் அறிவியல் சாமியார். அவர் எது கூறினாலும் சரியாகத்தான் இருக்கும் என்று பக்த கோடிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

அணு உலைக்கு ஆதரவாக - அவரது பெயரையும் ஆசிரியராக உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.


அணு உலைகளின் விபத்துகளை சதவிகித அடிப்படையில் ஒரு பத்தியில் தாண்டிச் செல்கிறது கட்டுரை.

நிலக்கரி போன்ற தாது சுரங்கங்களின் பாதகமாக கீழ் உள்ளவற்றைப் பட்டியல் போட்டுச் செல்கிறது.

//But the presence of this natural resource has been a curse for the local tribal villagers. The Jharia area also has a large number of ongoing mine fires, which have a history of more than a century and have been causing great loss to life and property.//

//The entire area has been destroyed by the mining activity and rendered uninhabitable for humans or any other life form. Sadly, it can never be restored, at least not for the next million years.// - (highlight - kaiyedu)

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறது கட்டுரை நிலக்கரிச் சுரங்கங்களினால் ஏற்படும் கொடுமைகளை.

அய்யா யுரேனியம் என்ன மரத்திலா காய்க்கிறது அப்படியே சாப்பிடுவதற்கு.
ஜடுகுடா மலைப்பகுதி குறித்து ஒரு வரிகூட இல்லை. யுரேனியம் தாதுக்களைத் தோண்டும்போது மேலே சொன்ன எவ்வித ஆபத்தும் வராதா அல்லது நடக்கவில்லையா?

இப்படி அடிப்படையான கேள்விகளைக் கூட மக்கள் கேட்டுவிடக்கூடாது என்று கவனமாக பின்னப்பட்டிருக்கிறது கட்டுரை.

இது குறித்து விரிவான அறிவியல் விமர்சனத்தை பின்னர் பார்க்கலாம்.

ஆனால், பக்த கோடிகளின் இறைச்சல் கட்டுரையின் சத்தத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பது கட்டுரையைவிட கவலை கொள்ளச் செய்யும் விசயமாக இருக்கிறது.

பிறசேர்க்கை:

அணுக்கதிர்வீச்சின் பாதிப்பை விளக்கும் - தெகல்காவின் கட்டுரை

கலாமின் கட்டுரைக்கு ஒரு ஆற்றல் துறை ஆய்வாளரின் பதில் கடிதம்.

Wednesday, September 7, 2011

மின்னஞ்சலில் வந்தது - KVPY @ IISc

மின்னஞ்சலில் வந்தது இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் யாரேனும் ஒருவருக்கு சாத்தியப்படலாம் என்று இங்கே பகிரப்படுகிறது.

வணக்கம்,
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசால் KVPY என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் அறிவயல், பொறியியல் மற்றும் மருத்தவ துறைகளில் ஆராய்ச்சி ஆர்வத்தை உருவாக்கும் வண்ணம் மாதம் தோறும் ரூபாய் 4000 முதல் 7000 வரை கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் KVPY எழுத்துத் தேர்வு (+2 மாணவர்களுக்கு) இந்திய அறிவியல் நிறுவனத்தின் ( Indian Institute Of Science) B .S படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகவும் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. இதற்கான காரணம் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு நமது பள்ளி மற்றும் கல்லூரிகளை சென்றடையாமை தான் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் முதல் முயற்சியாக இத்திட்டம் பற்றிய செய்தியை சுருக்குமாக தமிழில் மொழி பெயர்த்து அதனை இந்த மின்னஞ்சலில் இணைத்து உள்ளோம். தயவுசெய்து அதன் விபரங்கள் மற்றும் முக்கியத்துவத்தை குறிப்பாக 10,11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு உணர்த்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு,
ரா.கார்த்திக்
செயலர், தமிழ்ப்பேரவை
இணையதள முகவரி: www.kvpy.org.in/main/index.htm
மின்னஞ்சல்:application@kvpy.org.in
KVPY தொலைபேசி எண்கள்: (080) 2360 1008, 2293 2975 / 76 (EPBX 11-22)

மேலும் தகவல்கள்

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)

KVPY என்பது அறிவியல், பொறியியல், மருத்துவம் பயிலும் மற்றும் பயில விரும்பும் மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் திறமையான மாணவர்களைத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாந்திர ஊக்க தொகையாக ரூ 4000 முதல் ரூ 7000 வரை அரசு வழங்குகிறது.



ஊக்க தொகை பற்றிய விபரங்கள்:

BASIC SCIENCES


Monthly Fellowships


Annual Contingency Grant

SA and SX

(After X class)


Rs. 4000


Rs. 16000

SB

During B. Sc/B.S. and 1st to 3rd years of Integrated M. Sc.


Rs. 5000


Rs. 20000

SB

During M. Sc/M.S. and 4th & 5th years of Integrated M. Sc.


Rs. 7000


Rs. 28000



தேர்வு விதிமுறைகள் மற்றும் தகுதிகள் :

+1, +2 தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கபடுவர். அக்டோபர் 30 - ம் தேதி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்கள் KVPY இணைய தளத்தில் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Stream SA:

பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியலில் 80 % (70 % for SC /ST ) எடுத்து தற்போது 11 - ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள்


Stream SX:

தற்போது 12-ம் வகுப்பில் படித்துத் கொண்டிருக்கும் மாணவர்களில் அடுத்த வருடம் கல்லூரியில் இளநிலை அறிவியல் (B.Sc, B.S) சேர விரும்பும் மாணவர்கள். இவர்கள் பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியலில் 80 % (70 % for SC /ST ) எடுத்திருக்க வேண்டும்

Stream SB:

தற்போது கல்லூரியில் (B.Sc, B.S) முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள். இவர்கள் 12-ம் வகுப்பில் அறிவியலில் 60 % (50 % for SC /ST ) எடுத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை


(1) ஒவ்வொரு பிரிவுக்கும் (SA, SB, SX) தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன.

(2) ஒன்றுக்கு மேற்ப்பட்ட பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும்.


(3) இணையதளத்தின் மூலமாகவோ அல்லது விண்ணப்பபடிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

எந்த State Bank of India (SBI) விலும் Rs.200/- (SC/ST மாணவர்களுக்கு 100/- ) Kishore Vaigyanik Protsahan Yojana( KVPY) என்ற பெயரில் A/c. No. 10270577392 என்ற எண்ணுக்கு செலுத்தி, அந்த படிவத்தை (pay-in-slip) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். எந்தப்பிரிவில் விண்ணப்பிககிறோம் என்பதை அஞ்சல் உறையின் மேல் தெளிவாக எழுத வேண்டும் (SA, SX, SB).



மாணவிகளுக்கும், பார்வை மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் விண்ணப்பங்கள் கட்டணம் கிடையாது
.


கீழ்க்கண்ட ஆவணங்கள் முழுமையான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

(1) சாதிச்சான்றிதழ் (SC /ST மாணவர்கள் மட்டும்)


(2) மருத்துவச்சான்றிதழ் ( பார்வை மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் )



அனைத்து ஆவணங்களும் 12-09-2011 (திங்கள் கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்போ KVPY அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

முக்கியத் தேதிகள்:


விண்ணப்பங்கள் வழங்கப்படும் கடைசி நாள்:


அஞ்சல் மூலமாக: 02 செப்டம்பர் 2011


நேரில் (IISC ) : 09 செப்டம்பர் 2011


இணையதளத்தின் முலமாக அனுப்புவதற்கு கடைசி நாள்: 09 செப்டம்பர் 2011



முழுமையான விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 12 செப்டம்பர் 2011


விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி;

The Convener

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)

Indian Institute of Science

Bangalore 560 012.


மேலும் விவரங்களுக்கு (விண்ணப்பங்கள், கடந்த வருட வினாத்தாள்கள் ) கீழ்க்கண்ட இணைய தளத்தை அணுகவும்: http://www.kvpy.org.in/main/index.htm