Friday, March 7, 2008

இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளைப் பரிசோதிக்கப் புதிய குழு

சமீபத்தில் வெளிவந்த திருப்பதி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரின் தவறுகள், உலகளவில் இந்திய அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. அப்பல்கலையைச் சேர்ந்த ப.சிரஞ்சீவி என்னும் வேதியியல் துறைப் பேராசிரியர் செய்த பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது. http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

ஒரே கட்டுரையை மிகச்சிறு மாற்றத்துடன் இருவேறு அறிவியல் இதழ்களுக்கு அனுப்புவது, பிறருடைய அறிவியல் கட்டுரைகளை அப்படியே எடுத்து வெகுசில மாற்றங்களைச் செய்து தமது பெயரில் வேறு அறிவியல் இதழ்களுக்கு அனுப்புவது, மற்றும் வேறு சிலரது பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை எடுத்து தமது இணையான மூலக்கூறுகளுக்கான முடிவுகளாகப் பிரசுரிப்பது என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 2004-2007 க்குள் ஏறத்தாழ 70 அறிவியல் கட்டுரைகளைத் தனது பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

அவரது மேற்பார்வையில் பணிபுரியும் ஆராய்ச்சி மாணவர்களிடம் அவர்களது முனைவர் பட்டத்திற்காகப் பணம் வசூலிப்பது. மேலும், அவர் செய்ததாகக் கூறி வெளியிடப்பட்டப் பல அறிவியல் கட்டுரைகளில், அப்பல்கலையில் அவ்வாய்வுகள் செய்ய வசதிகளோ உபகரணங்களோ இல்லாத போதும், அவற்றைச் செய்தது போல் எழுதுவது போன்ற பல தவறுகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், இத்தவறுகள், வெளிச்சத்துக்கு வந்தவுடன், வேறுசிலர் மேல், பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்கப்பார்த்திருக்கிறார்.

இந்நிகழ்வு, சர்வதேச அளவில் இதுவரைக் கண்டிராத அளவிளான அறிவியல் மோசடி என்றழைக்கின்றனர், அறிவியல் கட்டுரைகளை வெளியிடும் இதழாசிரியர்கள்.

இது போன்ற நிகழ்வுகளைக் குறைக்கவும், சர்வதேச அளவில் இந்திய அறிவியலின் தரத்தை நிலைநாட்டவும், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் நேர்மையைப் பரிசோதிக்கவும் ஒரு குழு அமைப்பதற்குப் பரிந்துரை செய்யப்போவதாக, பிரதமர், திரு. மன்மோகன்சிங்கின் அறிவியல் ஆலோசகரும், இந்திய விஞ்ஞான மையத்தின் முன்னால் இயக்குனரும், தற்போதைய ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனருமான பேராசிரியர், C.N.R. Rao, அறிவித்திருக்கிறார்.

இவ்வறிவிப்பு வரவேற்கத் தக்கதே ஆனால், இக்குழுவில் யார் இருப்பார்கள், இதன் செயல்பாடு எப்படியிருக்கும், இக்குழுவில் இருக்கும் உறுப்பினர்களை யார் பரிசோதிப்பார்கள், எனப் பல கேள்விகள் இதிலுமுண்டு. இக்குழுவமையும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட பரிசோதனைக்குழு அமைப்பதாக சர்வதேச விஞ்ஞானக் குழுக்களுக்கு அறிவிப்பு கொடுத்தாயிற்று, இனி இதுவும் கால மாற்றத்தில் மற்றுமொரு நிகழ்வாகப்போகுமா இல்லை பயனளிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இக்குழு குறித்த அறிவிப்பு சர்வதேச அறிவியலில் முதல் தரவரிசையிலிருக்கும் "Nature" என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.

இங்கே: http://www.nature.com/news/2008/080305/full/452015d.html

இச்சுட்டியிலுள்ள செய்திக்கு கீழிருக்கும் பின்னூட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பின்னூட்டங்கள் புறக்கனிக்க முடியாத/கூடாத வை.

கால அவகாசமிருந்தால் அனைத்துப் பின்னூட்டங்களையும் வாசிக்கலாம். ஆனால், இரண்டு பின்னூட்டங்களின் ஒரு பகுதியை மட்டும் கிழே கொடுத்திருக்கிறேன்.

//Indian scientists are not coming from another planet. They are the products of the same Indian society which is corrupt to its core. Indian education system may be able to produce tuition and coaching enabled work force to supply scientific/technical manpower-starved western countries, but it miserably failed to groom and promote people with innovative mind, people who ask questions. As a result we produce mainly technicians, not scientists or technocrats in real sense. Quality and integrity of Indian science was much better when there was only 20 universities and 500 colleges in Indian subcontinent (i.e. including Bangladesh and Pakistan) when the British left (1947). Now there are 376 universities and 17,700 colleges in India only with many new institutes with fancy and world class physical infrastructure but hardly any world class scientist like Satyen Bose or CV Raman. Currently Indian science is dominated by mediocre and below mediocre people with proper connections, high greed and ambition without having required scientific/technical capability. It’s like committing suicide to oppose such highly powerful “scientists” by any adventurous and honest person, still there in Indian science. I have no doubt that such “regulatory body” will eventually be grabbed by these “sciento-crates” (thanks to Dr. U. C Lavania for the term) and the show will go on as usual. //

//Not surprisingly, Indian scientific research in bio-medical field is a laughable matter in the Western world. An extremely small group of researchers with their reputation intact in the West have any impact worth noticing. How to tackle this problem? The students are NEVER asked to do experiments in schools or colleges; they are told to reproduce results that are expected. Then again, the root cause is not to challenge the authority of the lame teachers/professors who have such fragile ego that I don't even want to go into that discussion.//


7 comments:

கல்வெட்டு said...

கோனார் நோட்ஸ் போடும் அளவிலேயே தான் இந்தியா உள்ளது. அதாவது , ஏற்கனவே உள்ள ஒன்றை பிரித்து மேய்ந்து படிப்பது,அதில் வித்தகராகி வாழ்க்கையை ஓட்டுவது.

**

ஆகச் சிறந்த I.I.T யில் இருந்து எத்தனை அறிவியல் நோபல் பரிசு பெற்ற அறிவாளிகள் உள்ளனர்?

**

IT யில் பெரிய டவுசராக அறியப்படும் இந்தியாவில் இருந்து ஒரு உருப்படியான (உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும்) கணினி கண்டுபிடிப்புகள் இதுவரை வரவில்லை.

***

innovation is not indian thing

கையேடு said...

//ஏற்கனவே உள்ள ஒன்றை பிரித்து மேய்ந்து படிப்பது,அதில் வித்தகராகி வாழ்க்கையை ஓட்டுவது.//

இக்கருத்து பெருமளவில் உண்மைதான்.


//innovation is not indian thing//

இவ்வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், இதன் பின்னிருக்கும் உங்களது சமுதாயக் கோபத்தை மட்டும் அங்கீகரிக்கிறேன். (உங்களது பலூன் விளையாட்டுக்கள் innovation இல்லையா)

கையேடு said...

தங்ளது கருத்துக்கு நன்றி திரு. அறிவியல் ஆயிரம். உங்கள் பின்னூட்டம் பெருமளவில் தனிப்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலிருப்பது போல் தெரிகிறது. அதனால், அதனை முழுவதுமாக வெளியிடவில்லை.

//இந்த தவறு நடக்க நாம் அனைவரும் ஒரு விதத்தில் காரணம்......//

உங்கள் பின்னூட்டத்தில், மேலே குறிப்பிட்ட இப்பகுதி பொதுவான காரணிகள் குறித்து பேசுவதால், இது குறித்து நாம் மேலதிகமாக உரையாடலாம்.

கல்வெட்டு said...

// இவ்வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், இதன் பின்னிருக்கும் உங்களது சமுதாயக் கோபத்தை மட்டும் அங்கீகரிக்கிறேன். //

:-))

//(உங்களது பலூன் விளையாட்டுக்கள் innovation இல்லையா)//

இல்லை அதுவும் சீமைச் சரக்குதான். :-(((

கையேடு said...

கல்வெட்டு said...

//இல்லை அதுவும் சீமைச் சரக்குதான். :-(((//

அப்படியா..?? ஆனால், உங்களையும் அறியாமல் அதில் ஏதாவது ஒரு புதிய ஒன்றை நுழைத்திருப்பீர்கள், அல்லது இனிமேல் நுழைப்பீர்கள், என்றுதான் நம்புகிறேன்.

மேலும், உங்களது பலூன் விளையாட்டை உடனடி உதாரணமாகக் கொண்டேன். இதுபோல் விளையாட்டு மூலம் கல்வி, அறிவியல் என்று உழைக்கும் சிலர், புதியவற்றையும் புதிய வழிமுறைகளையும் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதனால்தான் "innovation is not indian thing" என்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறினேன்.

Kulapam said...

கையேடு, நான் கூறியது தனிப்பட்ட கருத்தல்ல.....
என் ஆராய்ச்சி கூடம், நான் மட்டுமே இதை பயன்படுத்துவேன் என்னும் எண்ணம்
எந்த ஒரு தனிப்பட்ட சிபரிசு யில்லாமல் சிறு பல்கலைகழகத்தில் இருந்து வரும் ஆய்வு மாணவர்கள், IIT IISc ல் நடத்தபடும் விதம், இவை யாவும் அனைவரும் அறிந்ததே, சாலை ஒரத்தில் மலம் இருப்பது எனக்கு தெரியும், நீ மிதித்தால் எனக்கு என்ன என்று எண்ணும் போக்கு மாற வேண்டும். பிற நாட்டவர் பார்த்து சொன்ன பிறகு, ஓ அப்படியா கமிட்டி போட்டுடலாம், அப்படி சொல்லும் இவற்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை, இந்த மேலாத்திக்கதனம், ஒழியும் வறை, Any innivative indian thinking will not come out ......
I am not supporing the fraud or scam but committes will not solve the problem problem is elsewhere ....
Indian is a very innovative country but innovations are not happening in big universities .....

கையேடு said...

தெளிவுபடுத்தியதற்கு நன்றி திரு. அறிவியல் ஆயிரம்.

பல விதமான ஏற்றத்தாழ்வுகளை மிகச் சாதாரணமாக நடைமுறையில் கொண்டிருக்கும் இந்திய சமூகத்திலிருந்து வந்தவர்கள்தாம் இந்திய அறிவியலாளர்களும். அதனால் அறிவியல் துறையிலும் அதன் சாயல் இல்லாமல் இருக்காது.
இக்குழு குறித்த அறிவிப்பூ சர்வதேச அறிவியலில் ஏற்பட்ட தொய்வைச் சரிசெய்யவா, அல்லது இந்திய அறிவியலில் இருக்கும் குறைகளை ஆராய்வதற்கா என்பது அதன் செயல்பாடுகளுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

innovation என்பது அறிவியல் துறையோ அல்லது தேசிய பல்கலைக்கழகங்களோ உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. நமது அடிப்படைக் கல்வி முறையே innovative ஆன பதில்களுக்கு மதிப்பளிப்பவையள்ள, சிறந்த வாந்தியெடுப்புக்களுக்கான அங்கீகாரமே முதன்மைப் படுத்தப்படுகிறது.

நன்றி