Friday, June 5, 2009

இந்தியாவிலுள்ள போலி பல்கலைக்கழங்கங்களின் பட்டியல்



இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகம், கேரளா, பீகார், மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா , ம.பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தலா ஒரு பல்கலைக்கழகமும், உ.பி மற்றும் டில்லியில் முறையே ஒன்பது மற்றும் ஆறு பல்கலைக்கழகங்களும் போலிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

"State-wise List of fake Universities as on 18thJanuary, 2009"



Tamil Nadu - D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu.

முழுப்பட்டியல் இங்கே - http://www.ugc.ac.in/inside/fakealerts.html

இதோடு அமெரிக்காவில் இயங்கும் பல்கலைக்கழகம் என்று தன்னை அறிவித்துக் கொண்டு " American University of Hawaii" என்ற பெயரில் போலியாக இந்தியாவில் பட்டங்கள் வழங்கிவந்த ஒரு பல்கழைக்கழமும் பிடிபட்டிருக்கிறது.

"American University of Hawaii (AUH) operating in India is not accredited by any recognized accrediting agency and not licensed or approved by the State of Hawaii."

இதுபற்றிய முழுவிபரம் இங்கே : http://www.ugc.ac.in/inside/malprac.html

***********************************************************

இனி மற்றொரு சுவாரஸ்யமான செய்தி..

UGC ன் முகப்பு பக்கத்தில் (http://www.ugc.ac.in/index.html ) இப்போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் புதியவை என மின்னிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சுட்டியைத் தொடர்ந்து உள்ளே சென்றால் 18 சனவரி 2009 நிலவரப்படியான பட்டியல் என்று தெரிவிக்கிறது. ஆனால் அதே பக்கத்தில் அச்சு ஊடகங்களுக்கான (press release) அறிக்கையை நோக்கினால் தேதியில் எல்லாமே 2007 என்றிருக்கிறது...

அதுமட்டுமல்ல சுட்டியில் டில்லியின் கீழ் ஆறு பல்கலைக்கழகங்களின் பெயர் கொண்ட பட்டியல் இருக்கிறது. ஆனால் "press release" ல் ஐந்தின் பெயர்கள்தான் இருக்கிறது. ஒருவேளை அது பழைய "press release" ஆக இருக்குமோ இந்த சுட்டியின் கீழ் தவறுதலாகக் கொடுத்துவிட்டார்களோ... :((

2 comments:

பதி said...

தகவலுக்கு நன்றி !!!!!

ஆனால், இப்படி பட்டியல் வெளியிட்டால் மட்டும் நம்ம மக்கள் அங்க போய் காச கொட்டமா விட்டுடவா போறாங்க?

கையேடு said...

இது என்னவோ 2007 ல் வெளியிட்ட அதே பட்டியலில் மற்றொன்றைச் சேர்த்து இந்தாண்டும் வெளியிட்டு விட்டார்கள்னுதான் தோணுது. ஏற்கனவே எங்கேயோ பார்த்த பட்டியல் போலவே இருக்கு.

//ஆனால், இப்படி பட்டியல் வெளியிட்டால் மட்டும் நம்ம மக்கள் அங்க போய் காச கொட்டமா விட்டுடவா போறாங்க?//

:)