Sunday, November 6, 2011

கலாம் எனும் அறிவியல் சாமியார்


கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக - இன்றைய முக்கிய முகமாக முன்னிறுத்தப்பட்டிருப்பவர் கலாம் எனும் அறிவியல் சாமியார். அவர் எது கூறினாலும் சரியாகத்தான் இருக்கும் என்று பக்த கோடிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

அணு உலைக்கு ஆதரவாக - அவரது பெயரையும் ஆசிரியராக உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.


அணு உலைகளின் விபத்துகளை சதவிகித அடிப்படையில் ஒரு பத்தியில் தாண்டிச் செல்கிறது கட்டுரை.

நிலக்கரி போன்ற தாது சுரங்கங்களின் பாதகமாக கீழ் உள்ளவற்றைப் பட்டியல் போட்டுச் செல்கிறது.

//But the presence of this natural resource has been a curse for the local tribal villagers. The Jharia area also has a large number of ongoing mine fires, which have a history of more than a century and have been causing great loss to life and property.//

//The entire area has been destroyed by the mining activity and rendered uninhabitable for humans or any other life form. Sadly, it can never be restored, at least not for the next million years.// - (highlight - kaiyedu)

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறது கட்டுரை நிலக்கரிச் சுரங்கங்களினால் ஏற்படும் கொடுமைகளை.

அய்யா யுரேனியம் என்ன மரத்திலா காய்க்கிறது அப்படியே சாப்பிடுவதற்கு.
ஜடுகுடா மலைப்பகுதி குறித்து ஒரு வரிகூட இல்லை. யுரேனியம் தாதுக்களைத் தோண்டும்போது மேலே சொன்ன எவ்வித ஆபத்தும் வராதா அல்லது நடக்கவில்லையா?

இப்படி அடிப்படையான கேள்விகளைக் கூட மக்கள் கேட்டுவிடக்கூடாது என்று கவனமாக பின்னப்பட்டிருக்கிறது கட்டுரை.

இது குறித்து விரிவான அறிவியல் விமர்சனத்தை பின்னர் பார்க்கலாம்.

ஆனால், பக்த கோடிகளின் இறைச்சல் கட்டுரையின் சத்தத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பது கட்டுரையைவிட கவலை கொள்ளச் செய்யும் விசயமாக இருக்கிறது.

பிறசேர்க்கை:

அணுக்கதிர்வீச்சின் பாதிப்பை விளக்கும் - தெகல்காவின் கட்டுரை

கலாமின் கட்டுரைக்கு ஒரு ஆற்றல் துறை ஆய்வாளரின் பதில் கடிதம்.

5 comments:

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

வவ்வால் said...

கையேடு,

சாமியார்னா குறி சொல்லத்தான் செய்வாங்க:-))

போக்ரான்ல சோதனை செய்ததை வாழ்நாள் சாதனையா நினைப்பவரிடம் இருந்து எப்படி மாற்றுக்கருத்து வரும்னு எதிர்ப்பார்த்திங்க? அவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஷாக் ஆகி இருப்பேன்!

இப்போ தான் அணு உலைகளில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள ஒரு தவிர்க்க முடியாத டிசைன் குறைப்பாட்டினைப்பற்றி பதிவுப்போட்டேன், நேரம் இருந்தால் பாருங்க!

kaiyedu said...

நன்றிங்க அருள்..

நன்றிங்க வவ்வால்..

கலாமிடமிருந்து இது எதிர்பார்த்ததுதான் அதில் ஒன்றும் சிக்கலில்லை..

ஆனால் கலாம் சொல்லிவிட்டார் என்ற பக்த கோடிகளின் ஆரவாரம்தான் பெரிதும் கவலைக்குல்லாக்குகிறது.

முகுந்த்; Amma said...

Just gave you a award. Please visit my website to receive it.

thanks

கையேடு said...

நன்றிங்க முகுந்த் அம்மா விருதிற்கு.