Monday, April 20, 2009

ஈழம் - ஒரு கலந்துரையாடல்

சிலர் சர்வதேசம் என்கிறார்கள், சிலர் பூகோலம் தமிழர்களுக்கெதிரி என்கிறார்கள், இன்னும் சிலர் தீவிரவாதம் என்கிறார்கள். ஆனால், பால் மனம் மாறாக் குழந்தைகள் கூடக் கொன்று குவிக்கப் படுகிறார்கள்.

மேலும் சிலர் பரந்த மனப்பான்மை வேண்டுமென்கிறார்கள் ஒருவேளை மக்களைப் பரந்துபட்ட திறந்த வெளிச் சிறையில் அடைப்பதுதான் பரந்த மனப்பான்மையோ என்றுகூடத் தோன்றியது.

இன்று வரை தனி ஈழம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நம்பியிருந்தேன், இன்றும் அதையே நம்புகிறேன். ஆனால், எது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை ஈழத் தமிழர்தான் ஒன்றிணைந்து முடிவு செய்யவேண்டும்.

*************************************************************************************

தீர்வு எப்படி எழுதப்பட்டாலும், எழுதப்படப் போவதாகயிருந்தாலும், ஈழத்தின் போராட்டம் பற்றியும், இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்குள்ள உரிமை பற்றியும், அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் பற்றியும் மேலும் பலருக்கு அறியச் செய்யும் நோக்கில், ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேர உரையும், அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்குப் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரமும், கலந்துரையாடலையும்(ஆங்கிலத்தில்), பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் (Indian Institute of Science, Bangalore) சேர்ந்த, தன்னார்வம் கொண்ட மாணவர்கள் சிலர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி விபரங்கள் கீழ்வருமாறு.








Speaker: Dr. P. Sahadevan,

Professor of South Asian Studies,
South Asian Studies division,
School of International Studies,
Jawaharlal Nehru University, Delhi.

http://www.jnu.ac.in/FacultyStaff/ShowProfile.asp?SendUserName=sahadevan


Date: 22nd April 2009

Time: Talk - 6:00 pm followed by question/open discussion session

Venue: Department of Physics, Lecture hall, IISc, Bangalore.


About the Speaker:

P. Sahadevan is Professor of South Asian Studies (since May 2003) and currently Book Review Editor of International Studies, an academic journal published by Sage, New Delhi. He held visiting fellowships at the University of Kent at Canterbury, U.K. (1993-94) and the Joan B. Kroc Institute for International Peace Studies, University of Notre Dame, USA (1998).

மேலதிகத் தகவல்கள், அவரது புத்தகங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய விபரங்களுக்கு :
http://www.jnu.ac.in/Faculty/sahadevan/

*************************************************************************************
பேராசிரியர் சகாதேவன் அவர்களின் உரைச் சுறுக்கம் விரைவில் இதே இடுகையில் சேர்க்கப்படும்.

இதில் பெங்களூருவில் இருக்கும் பதிவர்கள், நண்பர்கள் எனப் பொதுமக்களும் பங்குகொள்ளலாம்.

தற்செயலாகவோ அல்லது இதில் பங்குகொள்ளவோ, சென்னை மற்றும் பிற நகரத் தமிழ்ப் பதிவர்கள், பத்திரிக்கையாள நண்பர்களுள் சிலர், பெங்களூரு செல்வார்களெனில் கீழ்கண்ட தகவல்கள் உபயோகமாகயிருக்கலாம்.

How to reach IISc?

http://www.iisc.ernet.in/content_geninfohowtoreach.html

மேலுள்ள சுட்டியில், இரயில், பேருந்து, வானூர்தி, சொந்த வாகனம் என அனைத்துக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது.

Route Map:

http://www.iisc.ernet.in/images/campus_route.jpg

கீழுள்ள சுட்டியில் இந்திய அறிவியல் கழக வளாகத்தின் வரைபடம் உள்ளது. இயற்பியல் துறையை எளிதில் கண்டடைய பயன்படலாம்.

http://www.iisc.ernet.in/content_geninfocampusmap.html

*************************************************************************************

இந்நிகழ்ச்சியின்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் சிறிது வரலாறும் இணைத்து மூன்று பக்கங்களில் ஆங்கிலத் துண்டறிக்கைகள் இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளன. அவை உங்கள் பார்வைக்கு.


பக்கம் 1:


பக்கம் 2:




பக்கம் 3:

இவ்வுரையையும், கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

10 comments:

பதி said...

தகவலுக்கு நன்றி இரஞ்சித்,

நண்பர்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்...

கையேடு said...

நன்றி பதி.

பதி said...

இந்த விவாதத்தைப் பற்றி (அங்கு நடந்தவை) இங்கு பதியலாமே?

ஏனெனில், அது இந்திய அறிவியல் கழகம் போன்ற இடங்களில் இருக்கும் நமது மாணவர்கள் இது போன்ற பொது விசயங்களில் கொண்டிருக்கும் புரிதலை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்குமல்லவா?

கையேடு said...

நன்றி பதி,
ஒளிப்பதிவு செய்து தரவேற்றம் செய்த சுட்டிகளோடு வெளியிடலாம் என நினைத்திருந்தேன்.

பதி said...

//ஒளிப்பதிவு செய்து தரவேற்றம் செய்த சுட்டிகளோடு வெளியிடலாம் என நினைத்திருந்தேன்//

??????

:(

கையேடு said...

//பதி said...

??????

:( //

!!!!!!

:((

வெத்து வேட்டு said...

i think you know that this Tamil Eelam fight has nothing to do with those 1 Million "Indian Estate Worker-Tamils" or their statelessness..
Even IF Tamil Eelam is acchieved
there will be Recent Immigrant Indian Tamils living among Singalese..that is when India will be really forced to act because
if there is a riot like India-Pakistan Seperation then those Indian-Tamils are the one that is going to suffer...not the Tamils who got Tamil Eelam :)
this umblical code relation and blood relation ship that Tamil Nadu has is only with those Estate Tamils who only live among Singalese and their livly hood is among Singalese :)

கையேடு said...

Dear "வெத்து வேட்டு"

India is now just a monkey dancing for mahinda's sticks and it has no voice on srilanka.

//this umblical code relation and blood relation ship that Tamil Nadu has is only with those Estate Tamils who only live among Singalese and their livly hood is among Singalese :)//

HhAA!!! u have a great ethnic knowledge of TAMIL.

One last thing: TRY TO OPEN ur EYES world is more brighter.

ராஜ நடராஜன் said...

உங்கள் கையேடு பழக்கப்பட்ட பெயர்தான்.ஆனால் கண்ணில் படும் நேர பதிவுகளை மட்டுமே பார்வையிடுவதால் இடுகை கண்ணில் படவில்லை.தாமத்திற்கு வருந்துகிறேன்.

கையேடு said...

//தாமத்திற்கு வருந்துகிறேன்.//

இதுல வருந்தறதுக்கு என்னங்க இருக்கு.

ரெண்டு மாசத்துக்கு ஒரு பதிவு போட்டா நிச்சயமா யாரும் நினைவில வச்சுக மாட்டாங்க. :)

நன்றி..