Tuesday, January 15, 2008

2007 - எழுதியதில் பிடித்தது

எழுதியதில் பிடித்தது என்ற இந்த விளையாட்டிற்கு என்னை அழைத்த திரு.பாலா அவர்களுக்கு நன்றி.

ப்ளாக்ன்னு ஒன்னு இருந்தா அப்பப்போ எழுதனும். சும்மா நாலு பதிவெழுதிட்டு ஒப்பேத்திகிட்டுருந்தா இப்படித்தான் உங்க லட்சணத்தை உங்களுக்கே துகிலுறிச்சுக் காட்டவேண்டியிருக்கும்ன்றதை சொல்லாம சொல்லியிருக்கிறார் திரு.பாலா ன்னுதான் நினைக்கிறேன்.

எழுதியிருக்கறதே நாலு பதிவு இதுல இதுவேறயான்னு பலரும் கேக்கறது புரியுது. இப்படிப்பட்டத் தன்னடக்க மேற்பூச்சு எண்ணங்களின் ஆதிக்கத்தையும் மீறி இருப்பதில் ஒன்றை விளம்பரப்படுத்திவிடுகிறேன்.


"
நமக்கான அறிவியல்...!!!??? " என்ற ஒரு கட்டுரை நான் எழுதியதில் பிடித்தது.


காரணம்:

மற்ற கட்டுரைகளும், செய்திகளும் அப்போதைய சமூக நிகழ்வுகளின் தாக்கத்தில் வெளிப்பட்டவை. தேர்ந்தெடுத்த இக்கட்டுரையும் நிகழ்வுகளின் அடிப்படையில் எழுந்ததாயிருந்தாலும் பலநாட்கள் உள்ளிருந்த எண்ண வெளிப்பாடாக எழுதியது. மேலும், தீர்வுகள் பற்றியும் பேசியிருப்பதாகக் கருதுவதால் அதைத் தேர்வு செய்கிறேன்.

மேலும் 5 பேரை அழைக்க வேண்டும் என்ற விதியைக் கடைபிடிக்க முடியுமா தெரியவில்லை. ஏனெனில் இவ்வலைப்பதிவுலகத்தில் நான் உரையாடியவர்கள் மிகக் குறைவு. மேலும், அவர்களின் அனுமதியின்றி அவர்களை அழைக்கலாமா தெரியவில்லை. அவர்களின் கால அவகாசத்தையும் அனுமதியையும் கோரயிருக்கிறேன், சம்மதித்தால் அந்த அவர்கள் இவர்களாக இருப்பார்கள்.


1. திரு, ஜமாலன் - மொழியும் நிலமும்

2. திரு. கோவி.கண்ணன் - காலம்

3. திரு. ஆழியூரான் - நடைவண்டி

3 comments:

Boston Bala said...

அழைப்பை ஏற்று உடனடியாக பதிவும் இட்டதற்கு நன்றி :)

கோவி.கண்ணன் said...

பெயரை முன்மொழிந்ததற்கு நன்றி !

ஒரிரு நாள்களில் எழுதுகிறேன்.

ஜமாலன் said...

நண்பரே நலமா?

விடுமறை முடிந்து பணிக்கு திரும்பிவிட்டீர்களா? நீங்கள் என்மீது எடுத்துக் கொண்டுள்ள இந்த உரிமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன். தவிரவும் நீண்ட நாட்காளாயிற்று உங்களை பதிவில் கண்டு. நானும் சென்ற 1 மாத காலமாக அலுவலகப் பணியால் பதவிட இயலவில்லை. நிற்க. மற்ற விடயங்கள் வழக்கம்போல பேசலாம். இந்த விளையாட்டுபற்றி தெரியவில்லை.இருந்தாலும் உங்களைப்போல நானும் 3பேரிடமோ 5 பேரிடமோ டார்ச்சை (ஒளியை) தந்துவிடுகிறேன்.நன்றி.